நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் 2014ஆம் ஆண்டில் ஆசிய அளவில் வர்த்தக துறையில் சிறப்பாக செயல்படும் சக்தி மிகுந்த 50 பெண்களை பட்டியலிட்டுள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பொதுவாக பெண்கள் வியாபரத்திலும், வர்த்தகத்தில் ஆதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்ற எண்ணம் பலரிடத்திலும் உள்ளது, ஆனால் இது முற்றிலும் பொய். கடந்த 15 வருடத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இனி இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியார்களை பற்றி பார்போம்.
50 சக்தி வாய்ந்த பெண்கள்
போர்ப்ஸ் நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் 50 சக்திவாய்ந்த வர்த்தக பெண்கள் பட்டியலில், ஆசியாவில் சிறப்பாக செயல்படும், சீஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்
உஷா சங்வான்
இவர் மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஆவார்.
ஷிக்கா சர்மா
இவர் இந்திய தனியார் வங்கித்துறையில் நீங்கா இடம்பிடித்துள்ள ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஆவார்.
கிரன் மஜும்தார் ஷா
இவர் இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
அகிலா ஸ்ரீநிவாசன்
இவரும் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையை சார்ந்தவர் தான். அகிலா ஸ்ரீநிவாசன், இவர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆவார்.
சந்தா கோச்சர்
இந்திய தனியார் வங்கித்துறையில் பல மாற்றங்கள், புதிய உயரங்களை அடைந்த ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து அடுத்த இடங்களில் இடம்பெற்றவர்களை வரிசையாக பார்போம்.
அருந்ததி பட்டாச்சார்யா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை வெளிநாடுகளில் செல்லமாக “first lady of Indian banking” என்று அழைக்கப்படுவார்.