மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் பேப்பர் ஸ்ட்ரிப் எபோலா மற்றும் காய்சலை 10 நிமிடங்களில் கண்டறிந்து விடும். கருத்தரிப்பு சோதனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளில் இருக்கும் லேட்ரல் ஃப்ளோ எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற பேப்பர் டயாக்னாஸ்டிக்ஸ் சோதனைகளை விட புதிய எம்ஐடி ஸ்ட்ரிப்ஸ் பல வண்ணங்களை கொண்டு பல வியாதிகளை கண்டறிய முடியும். இதை அடைய ஆராய்சியாளர்கள் சில்வர் மூலம் வடிவமைக்கப்பட்ட முக்கோன படிவங்களை பயன்படுத்தியுள்ளனர், இது வடிவங்களுக்கு ஏற்ற வண்ணங்களை பிரதிபலிக்கும்.
மேலும் ஆராய்சியாளர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற படிவங்களை உருவாக்கி இதன் மூலம் எபோலா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றை கண்டறியும்.
நோயாளியின் ரத்தம் ஸ்ட்ரிப் மீது செலுத்தப்பட்ட பின் ஸ்ட்ரிப்களில் இருக்கும் சிறிய துகள்கள் தெரியும், இதை வெறும் கண்களால் பார்க்க முடியும். கண் பார்வை இல்லாதவர்கள் தங்களது மொபைல் கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம்.