லாஜ் ஏஞ்சல்ஸ்: 87வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனேவும், சிறந்த நடிகைக்கான விருதினை ஜூலியன் மூரும் வென்றனர்.
87வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது.
இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹாலிவுட்டில் தயாரான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
சிறந்த நடிகர்
இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனே வென்றார். தி தியரி ஆஃப் எவ்ரிதிங் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை
சிறந்த நடிகைக்கான விருதினை ஜூலியன் மூர் வென்றார். ஸ்டில் அலைஸ் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குநர்
சிறந்த இயக்குநருக்கான விருது பேர்ட்மேன் படத்தை இயக்கிய அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இவர் வென்றார்.
சிறந்த அசல் திரைக்கதை
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது, பேர்ட்மேன் படத்துக்காக அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டு, நிகோலஸ் ஜாக்கோபோன், அலெக்சான்ட் டைன்லாரிஸ் ஜூனியர், அர்லென்டோ போ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
சிறந்த தழுவல் திரைக்கதை
சிறந்த ‘தழுவல்’ (அடாப்டட்) திரைக்கதைக்கான விருது கிரகாம் மூருக்கு வழங்கப்பட்டது. தி இமிடேஷன் கேம் படத்துக்காக இந்த விருதினை வென்றார் அவர்.
சிறந்த அசல் இசை
சிறந்த அசல் (ஒரிஜினல்) இசைக்கான விருதினை அலெக்சாண்டர் டேஸ்ப்ளாட் பெற்றார். படம்: தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்.