பிரகாசமான ஒரு காலை வேளையில், வில் மற்றும் அம்புகளுடன் வனப்பகுதியில் இளைஞர்கள் பலர் திரண்டனர். ஆனால் இவர்கள் எல்லாம் சாதாரண இளைஞர்கள் அல்ல. இவர்கள் தான் ஐந்து பாண்டவர்களும் நூறு கௌரவர்களும். இந்த ஐந்து பாண்டவர்களும், நூறு கௌரவர்களும் உறவினர்கள் ஆவார்கள். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்களுக்கான பகை கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சிறுவர்கள் தான் பலம் மிக்க ஆண்களாக வளர்ந்து வந்தார்கள். ஐந்து பாண்டவர்களும் கடவுள்களின் பிள்ளைகள் வேறு.
அக்காலத்தில் இருந்த பிராமண வீரர்களில் ஒருவராக விளங்கியவர் தான் துரோணாச்சாரியார். பரசுராமனிடம் இருந்து சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பற்றிய ரகசியங்களை எல்லாம் கற்று வைத்திருந்தார். தன் மைத்துனரான க்ருபாச்சாரியாவை சந்திக்க இவர் அஸ்தினாபுரம் வந்திருந்த போது, தன் பொறுப்பில் பாண்டவர்களையும் கௌரவர்களையும் கவனித்து வந்தார் பீஷ்மர். அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய பயிற்சிகளை அளிக்குமாறு துரோணாச்சாரியாரிடம் பீஷ்மர் கேட்டுக் கொண்டார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் எதையும் வேகமாக கற்றுக் கொள்வதால், பல்வேறு திறன்களை சீக்கிரமாகவே கற்றுக் கொண்டனர். அனைத்து இளவரசர்களும் ஆயுதங்கள் பயன்படுத்துவதை பழகிய போது, ஒவ்வொருவருக்கும் தங்களுக்கென பிடித்த ஒன்று இருந்தது. துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதத்தின் மீது ஈடுபாடு. யுதிஷ்டருக்கோ ஈட்டி என்றால் பிரியம். அர்ஜுனனுக்கோ வில்லும் அம்பும் என்றால் இஷ்டம். இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவனுக்கோ வாள் என்றால் பிரியம்.
நடுநிலை ஆசான் துரோணாச்சாரியார்
துரோணாச்சாரியாரை தவறாக நினைத்த மற்ற மாணவர்கள்
இருப்பினும் இவருடைய இந்த வியப்பை கண்ட கௌரவர்கள் ஒருபட்சமாக நடந்து கொள்கிறார் என தவறுதலாக எடுத்துக் கொண்டனர். அதனால் அதனைப் பற்றி தொடர்ச்சியாக குறை கூறியே வந்தனர். தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த துரோணாச்சாரியார், அர்ஜுனனின் தனித்துவமான ஆற்றலை மற்ற மாணவர்களின் மத்தியில் எடுத்துக் காட்ட நினைத்தா
அனைத்து மாணவர்களையும் ஆசிரமத்திற்கு வெளியே அழைத்தார். ஒரு மரத்தின் மீது மர பறவை ஒன்றை வைத்தார். அதன் கண்கள் மட்டும் அடர்த்தியான நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அனைத்து மாணவர்களையும் பார்த்து, “இளவரசர்களே, ஒரு வீரனுக்கு தேவையான பல்வேறு வித்தைகளை நீங்கள் கற்றுக்கொண்டு விட்டீர்கள். இப்போது பரீட்ச்சைக்கான நேரம் வந்து விட்டது. உங்கள் திறன்களை எனக்கு காண்பிக்கும் நேரம் வந்து விட்டது. இப்போது, வில்வித்தையில் உங்களது திறனை எனக்கு நீங்கள் காட்ட வேண்டும். அதோ, அந்த மரத்தின் மீது கண்களுக்கு மட்டும் வர்ணம் பூசப்பட்ட ஒரு மர பறவையை வைத்துள்ளேன். அதை குறி வைத்து, அதன் கண்ணை தாக்க வேண்டும்” என கூறினார்.
முதலில் அழைக்கப்பட்டது யுதிஷ்டர். பறவையை குறி வைக்கும் படி அவனிடம் துரோணாச்சாரியார் கூறினார். ஆனால் அம்பை விடுவதற்கு முன் தன் கேள்விக்கு பதிலளிக்க கூறினார். யுதிஷ்டர் தயாரான போது, “யுதிஷ்டிரா, உன் கண்களுக்கு என்ன தெரிகிறது என கூற முடியுமா”, என துரோணாச்சாரியா கேட்டார். “எனக்கு பறவை, மரம், மரத்தில் உள்ள பழங்கள் மற்றும் இன்னும் அதிகமான பறவைகள் தெரிகிறது.” என யுதிஷ்டிரா துரோணாச்சாரியாரிடம் கூறினான். வில்லையும் அம்பையும் வைத்து விட்டு போக சொன்னார். ஆச்சரியமடைந்த யுதிஷ்டர் குருவின் சொல்லை மதித்து அவர் சொன்னபடி செய்தான்.
பீமன்
அடுத்தது பீமனின் முறை. மறுபடியும் அவனிடம் அதே கேள்வியை கேட்டார் துரோணாச்சாரியார். “குருதேவா, எனக்கும் பறவை, மரம், பழங்கள்…” என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனை தடுத்து நிறுத்தி ஓரமாக நிறக் சொன்னார்.
நகுலன் மற்றும் சகாதேவன்
அடுத்தது இரட்டையர்களின் முறை. அவர்களுக்கும் அதே கேள்வி கேட்கப்பட்ட போது, “எனக்கு மக்கள், மரங்கள் மற்றும் பறவை தெரிகிறது” என நகுலன் கூறினான். சகாதேவனோ “எனக்கு பறவை, பழங்கள் மற்றும் மரம் தெரிகிறது” என கூறினான். அவர்களையும் போக சொன்னார்
கடைசியாக வந்தது அர்ஜுனன். அர்ஜுனன் தயாரான போது “அர்ஜுனா, உனக்கு என்ன தெரிகிறது?” என அவனிடம் துரோணாச்சாரியார் கேட்டார். “குருதேவா, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை.” என கூறினார். “அம்பை விடு!” என புன்னகையுடன் துரோணாச்சாரியார் கூறினார். குறியைப் பார்த்த அர்ஜுனன் அம்பை செலுத்தினான்.
கடைசியாக வந்தது அர்ஜுனன். அர்ஜுனன் தயாரான போது “அர்ஜுனா, உனக்கு என்ன தெரிகிறது?” என அவனிடம் துரோணாச்சாரியார் கேட்டார். “குருதேவா, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை.” என கூறினார். “அம்பை விடு!” என புன்னகையுடன் துரோணாச்சாரியார் கூறினார். குறியைப் பார்த்த அர்ஜுனன் அம்பை செலுத்தினான்.
எப்படி இருட்டில் உண்ண முடிகிறது முதலில் தன் சகோதரனை பார்த்து அவன் ஆச்சரியமடைந்தாலும், முயற்சி செய்தால் இருட்டை கூட கண்களுக்கு பழக்கப்படுத்தி விடலாம் என்பதை புரிந்து கொண்டான். அதனால் தன் வில் வித்தையை இரவிலும் பயிற்சி எடுக்கலாம் என்பதையும் புரிந்து கொண்டான். உடனே பயிற்சியையும் தொடங்கி விட்டான்.
இருட்டில் வில்லையும் அம்பையும் பயன்படுத்துவது சுலபமல்ல. அதேப்போல் இலக்கை குறிப்பார்த்து அடிப்பது இன்னும் கஷ்டமாக இருந்தது. இருப்பினும் தன் விடாமுயற்சி மற்றும் சிரத்தையால் இந்த கலையையும் கூட அர்ஜுனன் கற்றுக் கொண்டான். பகல் நேரத்தை போலவே இரவு நேரத்திலும் வில்லையும் அம்பையும் திறமையாக பயன்படுத்தும் சிலரில் அர்ஜுனனும் ஒருவனாவான்.
குறிப்பு
அர்ஜுனனின், விடாமுயற்சியும் கவனிப்பும் வில்வித்தைக்கு மட்டுமல்லாது, நம் அன்றாட வேலைகளுக்கும் உதவிடும். அது அலுவலக வேலையோ அல்லது வீட்டு வேலையோ, அதனை விடாமுயற்சியுடன், கவனித்து செய்து வந்தால், அதனை வேகமாகவும் சிறப்பாகவும் முடிக்கலாம்