தபாலில் வந்த அந்தக் கடிதத்தை, பிரித்துப் படித்தபோது சம்பந்தமில்லாத ஒருவிதமான பயம், அந்தத் தாயின் மனதில் நிழலாகப் படிந்தது. ஆனால் மகன் கப்பல்படை பயிற்சி நிலையத்திலிருந்து மகிழ்ச்சியுடன் ‘நலம் விசாரித்துத்தான்’ கடிதம் எழுதியிருந்தான். அதில் அவன் பேசுவதைப் போல வரிக்கு வரி வழக்கமான நகைச்சுவை இருக்கவே செய்தது. கூடிய விரைவில், விடுமுறை கிடைத்தவுடன் ஊருக்கு ஓடிவந்து, தாயின் மடியில் படுத்து உறங்க வேண்டுமென்று இருபத்தைந்து வயதான அந்த ஆபிசர், குழந்தையைப் போல தன் அம்மாவுக்கு ஆசை ஆசையாக ... Read More »
Daily Archives: February 18, 2015
கதவு தட்டப்பட்டது!!!
February 18, 2015
லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ‘டொக்… டொக்…’ கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11.55. இரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். ‘நிக்சன்’ – என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், ‘டொக்… டொக்…’ ‘யாரது?’ ... Read More »