Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 10
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 10

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 10

2011 – உலக கோப்பை

28 ஆண்டுகளுக்கு பிறகு டோனியின் படை இந்தியாவுக்கு உலககோப்பையை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தது.

10–வது உலககோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்தின.

டோனி தலைமையிலான இந்திய அணி ‘லீக்’ ஆட்டங்களில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோற்றது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் இந்தியா 29 ரன்னில் வென்றது. மற்றொரு அரை இறுதியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

ஆசிய கண்டத்தில் உள்ள அணிகள் முதல் முறையாக இறுதிப்போட்டியில் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 274 ரன் எடுத்தது. ஜெயவர்த்தனே 103 ரன் எடுத்தார். ஜாகீர் கான், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இந்தியா 10 பந்து எஞ்சி இருந்த நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வென்று 2–வது முறையாக உலககோப்பையை வென்றது.

கோப்பையை பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்த இறுதிப்போட்டியில் டோனியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. 5–வது வீரராக முன்னதாக களம் இறங்கி அவர் 79 பந்தில் 91 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும். வெற்றிக்கான சிக்சரை அடித்த அவரது ஷாட் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. காம்பீர் 97 ரன் எடுத்தார்.

* யுவராஜ சிங் தொடர் நாயகன் (362 ரன் குவிப்பு, 15 விக்கெட்) விருதை பெற்றார்.

* ஜாகீர் கான் 21 விக்கெட் கைப்பற்றி அப்ரிடியுடன் இணைந்து முதலிடம் பிடித்தார்.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை நடத்துவதில் முதலில் கைகோர்ப்பதாக இருந்தது. ஆனால் 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் கழற்றி விடப்பட்டது. இருப்பினும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாகிஸ்தானின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கை மண்ணில் நடத்தப்பட்டன.

இதில் பெர்முடா, ஸ்காட்லாந்து நீக்கப்பட்டு அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 14ஆக குறைக்கப்பட்டது. முந்தைய உலக கோப்பைகளில் கடைபிடிக்கப்பட்ட குழப்பமான சூப்பர் சிக்ஸ், சூப்பர்-8 முறைகளும் அடியோடு ஒழிக்கப்பட்டன. கடந்த உலக கோப்பையில் குறைந்த அணிகளுடன் குரூப் பிரிக்கப்பட்டதால், ஒரு சில அதிர்ச்சி தோல்வி காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிர்பாராதவிதமாக முதல் சுற்றுடன் நடையை கட்டின. இது போன்று பெரிய அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறுவதை தவிர்ப்பதற்காக இந்த தடவை அணிகள் இரு பிரிவாக மட்டும் பிரிக்கப்பட்டன. நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் முறையும் (டி.ஆர்.எஸ்.) அறிமுகம் ஆனது.

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதியை எட்டும்.

சொந்த மண்ணில் போட்டிகள் நடந்ததால் டோனி தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி மீது பலமான எதிர்பார்ப்பு நிலவியது. அதை நிறைவேற்றும் வகையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை சந்தித்த இந்திய அணியினர் முந்தைய உலக கோப்பையில் விழுந்த அடிக்கு வட்டியும் முதலுமாக பழிதீர்த்தனர். இந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது. ஷேவாக் 175 ரன்களும் (14 பவுண்டரி, 5 சிக்சர்), கோலி 100 ரன்களும் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதில் 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்தது.

லீக் சுற்றில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஆட்டம் கடைசி நிமிடம் வரை

திக்..திக்..நிறைந்ததாக மெய்சிலிர்க்க வைத்தது. பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கரின் சதத்தின் உதவியுடன் (120 ரன்) இந்திய அணி 338 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டிராசின் (158 ரன்) சதத்தால் துரிதமாக முன்னேறிய போதிலும் இறுதி கட்டத்தில் இந்திய பவுலர்களின் சாமர்த்தியத்தால் இந்த ஆட்டம் சமன் (டை) (இங்கிலாந்து 8-338 ரன்) ஆனது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி நெதர்லாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை எளிதில் தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தது. தென்ஆப்பிரிக்கா (10 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி) ஆகிய அணிகளும் கால்இறுதிக்கு முன்னேறின.

‘ஏ’ பிரிவில், உலக கோப்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக தோல்வியை சந்தித்தது. உலக கோப்பையில் 34 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் ராஜநடை போட்டு வந்த ஆஸ்திரேலியாவுக்கு, லீக் சுற்றில் பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டது. கொழும்பில் நடந்த இந்த லீக்கில் ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவை 176 ரன்களில் அடக்கி பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீக் முடிவில் இந்த பிரிவில் பாகிஸ்தான் (5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளி), இலங்கை (9 புள்ளி), ஆஸ்திரேலியா (9 புள்ளி), நியூசிலாந்து (8 புள்ளி) ஆகிய அணிகள் கால்இறுதியை அடைந்தன.

கால்இறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் பந்தாடின. வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி 49 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 6-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. நாக்-அவுட் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற தென்ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் இந்த முறையும் நீடித்தது.

இன்னொரு கால்இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் ஆமதாபாத்தில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிக்கிபாண்டிங் தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். பிறகு ஆடிய இந்திய அணி தெண்டுல்கர் (53 ரன்), கவுதம் கம்பீர் (50 ரன்), யுவராஜ்சிங் (57 ரன்) ஆகியோரின் நேர்த்தியான ஆட்டத்தால் 47.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அணி மண்ணை கவ்வியது. 1992-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இறுதி சுற்றில் இடம் பெற முடியாமல் போனதும் இது தான் முதல்முறையாகும்.

இதைத் தொடர்ந்து அரைஇறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரைஇறுதியில் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மொகாலியில் மோதின. பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு மத்தியில் இந்த அரைஇறுதி நடந்தது. இரு நாட்டு பிரதமர்களுக்கும் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

உச்சக்கட்ட டென்ஷனுக்கு இடையே முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. 6 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். இன்னும் 15 ரன் எடுத்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதத்தை ருசித்திருப்பார். பின்னர் விளையாடிய அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்க வைத்துக் கொண்டது. இந்திய தரப்பில் பந்து வீசிய ஜாகீர்கான், நெஹரா, முனாப் பட்டேல், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் அனைவரும் சொல்லி வைத்தார் போன்று தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இரவில் பட்டாசு வெடித்து உற்சாகத்தில் திளைத்தனர்.

இதையடுத்து இந்தியா-இலங்கை இடையிலான இறுதி ஆட்டம் ஏப்ரல் 2-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அரங்கேறியது. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு ஆசிய அணிகள் சந்திப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

டாஸ் போடப்பட்ட போது இலங்கை கேப்டன் சங்கக்கரா என்ன கேட்டார் என்பது சரியாக காதில் விழவில்லை என்று போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இரண்டாவது முறையாக நாணயம் சுண்டப்பட்ட போது, டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்கக்கரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. மஹேலா ஜெயவர்த்தனே சதம் அடித்து (103 ரன்) ஜொலித்தார்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் முதல் ஓவரிலேயே ஷேவாக் (0) மலிங்காவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சச்சின் தெண்டுல்கரும் (18 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கவுதம் கம்பீர் தூண் போல் நிலைத்து நின்று தனது பங்குக்கு 97 ரன்கள் திரட்டி வெற்றிக்கு அடித்தளமிட்டார். மிடில் வரிசையில் கேப்டன் டோனி திடீர் விசுவரூபம் எடுத்ததால், இந்திய அணியின் ஸ்கோர் எகிறியதுடன் இலக்கையும் வேகமாக நெருங்கியது. கடைசியில் தனக்கே உரிய பாணியில் அட்டகாசமான ஒரு சிக்சரை பறக்க விட்ட டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி சொந்த மண்ணில் சாதித்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை உலக கோப்பைக்கு முத்தமிட்டது. இறுதி ஆட்டத்தில் ஒரு வீரர் (ஜெயவர்த்தனே) சதம் அடித்தும் அந்த அணி வெற்றி பெற முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும். 91 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசிய டோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த உலக கோப்பையுடன் இலங்கை சுழல் சூறாவளி முரளிதரன் ஓய்வு பெற்றார்.

இந்த உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதில் யுவராஜ்சிங்கின் பங்களிப்பு மகத்தானது. அவர் பேட்டிங்கில் மிரட்டியதுடன் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் பிரமாதப்படுத்தினார். இதனால் சில ஆட்டங்களில் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்க முடிந்தது.

சதம், 4 அரைசதம் உள்பட 362 ரன்களுடன் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக பிரகாசித்த யுவராஜ்சிங் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலக கோப்பைக்கு பிறகு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தாலும், 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் அவருக்கு இடம் கிட்டவில்லை.

* உலக கோப்பையை இந்திய அணி வென்றவுடன், இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையை அறிவித்தது. அணி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடியும், பயிற்சியாளர் உள்ளிட்ட அணியின் உதவியாளர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க…இந்திய அணி உலக கோப்பையை “சூப்பராககைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97)அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.

ஸ்ரீசாந்த் வாய்ப்பு:

 

இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். “டாஸ்வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, “பேட்டிங்தேர்வு செய்தார்.

ஜாகிர் துல்லியம்:

இந்திய “வேகங்கள்துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் “மெய்டனாகஅமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். 

யுவராஜ் அபாரம்:

பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), “ரிவியுமுறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார். 

ஸ்ரீசாந்த் ஏமாற்றம்:

ரன் ரேட்மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின்6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33)அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தவித்தது.

இரண்டாவது சதம்:

அடுத்து வந்த குலசேகரா “கம்பெனிகொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் “பேட்டிங் பவர்பிளேயைபயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.

மலிங்கா மிரட்டல்:

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே “ஷாக்கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் “டக்அவுட்டானார். இது தொடர்பாக “ரிவியுகேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18)அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின். 

காம்பிர் அதிர்ஷ்டம்:

பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது “கேட்ச்வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் “ரன் அவுட்வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் “கேட்ச்சில்விராத் கோஹ்லி(35) அவுட்டானார். 

வெற்றி கேப்டன்:

அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது “கேப்டன் இன்னிங்ஸ்விளையாடிய தோனி,முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். 

இரண்டாவது கோப்பை:

தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினார். “பேட்டிங் பவர்பிளேயில்யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி,வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம்28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்ரீநாத் சாதனை சமன்

நேற்று, இரண்டு விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், உலக கோப்பை அரங்கில் 23 போட்டிகளில் பங்கேற்று 44 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில், முதலிடத்தை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் பகிர்ந்து கொண்டார். ஸ்ரீநாத், 34 போட்டிகளில் பங்கேற்று இந்த இலக்கை எட்டினார்.

ஆறாவது வீரர்

நேற்று, 33 ரன்கள் எடுத்த இலங்கையின் தில்ஷன், இம்முறை 9 போட்டிகளில் மொத்தம்500 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், பத்தாவது உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, உலக கோப்பை அரங்கில், இம்மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் ஆனார். முன்னதாக இந்தியாவின் சச்சின் (673 ரன்கள், 2003), ஆஸ்திரேலியாவின் ஹைடன் (659 ரன்கள், 2007),இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (548 ரன்கள், 2007), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (539ரன்கள், 2007), இந்தியாவின் சச்சின் (523 ரன்கள், 1996) உள்ளிட்டோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

28 ஆண்டுகளுக்கு பின்…

நேற்று இலங்கையை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது முறையாக (1983, 2011) உலக கோப்பை வென்று சாதித்தது. முன்னதாக கடந்த 1983ல், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றது. கடந்த 2003ல், கங்குலி தலைமையிலான இந்திய அணி, பைனல் வரை முன்னேறியது.

வெற்றிக் கேப்டன்

கேப்டன் தோனியின் வருகைக்கு பின், இந்திய அணிக்கு கோப்பை மழை பொழிகிறது. கடந்த 2007ல் இவரது தலைமையிலான இந்திய அணி, “டுவென்டி-20′ உலக கோப்பை வென்று சாதித்தது. தற்போது 50 ஓவர் உலக கோப்பை வென்று இந்திய அணிக்கு மேலும் ஒரு பெருமை தேடித் தந்துள்ளார். தவிர, கடந்த ஆண்டு இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′கோப்பை வென்று தந்துள்ளார்.

மூன்றாவது முறை

நேற்று இலங்கை அணி நிர்ணயித்த 275 ரன்னை இந்திய அணி “சேஸ்செய்தது. இதன்மூலம் இதுவரை நடந்துள்ள உலக கோப்பை பைனலில், மூன்றாவது முறையாக (1996, 99, 2011) “சேஸ்செய்த அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 1975, 79, 83, 87, 92, 2003, 2007ல் நடந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.

* கடந்த 1983ல் நடந்த பைனலில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்ரீகாந்த் (38), சந்தீப் படீல் (27), மொகிந்தர் அமர்நாத் (26) உள்ளிட்டோர் கைகொடுக்க, 54.4 ஓவரில்183 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, மதன் லால் மற்றும் மொகிந்தர் அமர்நாத் தலா 3 விக்கெட் வீழ்த்தி போட்டுத்தாக்க, 52 ஓவரில் 140ரன்களுக்கு சுருண்டது.

தோனி “6000′

நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் 6000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர், தனது 42வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார். இதுவரை 186 போட்டியில் பங்கேற்றுள்ள இவர் 6049 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய ஏழாவது இந்திய வீரர் ஆனார். முன்னதாக சச்சின், கங்குலி, டிராவிட், அசார், யுவராஜ், சேவக் உள்ளிட்டோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

காம்பிர் “4000′

நேற்று, 97 ரன்கள் எடுத்த இந்திய வீரர் காம்பிர், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், 4000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர் தனது 24வது ரன்னை கடந்த போது, இச்சாதனை படைத்தார். இதுவரை 114 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9சதம், 25 அரைசதம் உட்பட 4073 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 11வது இந்திய வீரர் ஆனார்.

இரண்டு முறை சாம்பியன்

இலங்கையை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் இரண்டு அல்லது அதற்கு மேல் கோப்பை வென்ற அணிகள் பட்டியலில் இணைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக நான்கு முறை (1987, 99, 2003, 2007) கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் (1975, 79), இந்தியா (1983, 2011) உள்ளிட்ட அணிகள் தலா இரண்டு முறை கோப்பையை கைப்பற்றின. பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.

முரளிதரன் ஏமாற்றம்

தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், 8 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 534 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் பத்து முறை ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒருநாள் (534 விக்கெட்) மற்றும் டெஸ்ட் (800 விக்கெட்) போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

தில்ஷன் முதலிடம்
பத்தாவது உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் இலங்கையின் தில்ஷன் முதலிடம் பிடித்தார். இவர், 9 போட்டிகளில் பங்கேற்று 2 சதம், 2அரைசதம் உட்பட 500 ரன்கள் எடுத்துள்ளார்.

அப்ரிதி-ஜாகிர் மிரட்டல்

இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும் தலா 21 விக்கெட் கைப்பற்றினர்.

இரண்டாவது இந்தியர் 

உலக கோப்பை அரங்கில், கடந்த 1992ம் ஆண்டு முதல், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை நியூசிலாந்தின் மார்டின் குரோவ் (1992),இலங்கையின் ஜெயசூர்யா (1996), தென் ஆப்ரிக்காவின் குளூஸ்னர் (1999), இந்தியாவின் சச்சின் (2003), ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (2007) உள்ளிட்டோர் தலா ஒரு முறை இவ்விருதை வென்றுள்ளனர். இம்முறை இந்தியாவின் யுவராஜ் சிங்கிற்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

குவிந்த வி.ஐ.பி.,க்கள் 

உலக கோப்பை கிரிக்கெட்டின் பைனலைக் காண, நேற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்,காங்., பொதுச்செயலர் ராகுல் , இலங்கை அதிபர் ராஜபக்சே, மத்திய அமைச்சர் கபில் சிபல் என, பல பிரபலங்கள் மும்பை வான்கடேயில் குவிந்தனர். இவர்கள் தவிர, சச்சின் மகன் அர்ஜுன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் போட்டியை காண திரண்டிருந்தனர்.

சச்சினை வீழ்த்திய மலிங்கா

மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல்., அணியின் கேப்டனாக இருப்பவர் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இவரது அணியின் நட்சத்திர பவுலர் இலங்கையின் மலிங்கா. நேற்றைய பைனலில் வேகத்தில் மிரட்டிய மலிங்கா முதலில் சேவக்கை “டக்’அவுட்டாக்கினார்.

பிரார்த்தனை பலிக்கவில்லை

இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை பைனலைக் காண, நேற்று மும்பை வந்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இடையில் திருப்பதி சென்று, இலங்கை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தாராம். ஆனால், “திருப்பதி ஏழுமலையான்’ இந்தியாவின் பக்கம் இருந்து, ராஜபக்சேயை கைவிட்டு, வெற்றியை நமக்கு கொடுத்துவிட்டார்.

ஹூண்டாய் கார் பரிசு

உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு, ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான “வெர்னா’ என்ற காரை, பரிசாக தர முன்வந்துள்ளது. இதன் படி, சுமார் 7முதல் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கிறது.

சதம் அடித்தும் தோல்வி

பொதுவாக உலக கோப்பை கிரிக்கெட்டின் பைனலில், எந்த அணியின் வீரர் சதம் அடிக்கின்றாரோ, அந்த அணி கோப்பை வெல்வது நிச்சயம். கடந்த 1996ல் இலங்கையின் அரவிந்த டிசில்வா (107*), 2003, 2007ல் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (140*), கில்கிறிஸ்ட் (149) அடித்த சதம் தான் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இலங்கையின் ஜெயவர்தனா சதம் அடிக்க, சற்று பதட்டம் ஏற்பட்டது. கடைசியில் தோனி, காம்பிர் அசத்த இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

ரூ. 13.6 கோடி பரிசு

உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, சாம்பியன் கோப்பையுடன், மொத்தம் ரூ. 44.1 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. தோல்வியடைந்த இலங்கை அணிக்கு ரூ. 6.75 கோடி கிடைத்தது.

பெங்களூரு “வெறிச்

உலக கோப்பை தொடரின் பைனல் போட்டியை பார்க்க அனைவரும் வீடுகள், கடைகளில் “முடங்கி’ விட்டதால், பெங்களூரு ரோடுகள் பாலைவனம் போல வெறிச்சோடின. முக்கிய “ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்’, கிளப்புகள் மற்றும் கடைகளில் ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கின. ஒருசில கடைகளில் “டிவி’யில் ஒளிபரப்பப்பட்ட கிரிக்கெட்டை பார்க்க மட்டும் கூட்டமாக கூடி நின்றனர். பாகிஸ்தான் போட்டிக்குப் பின் இரண்டாவது முறையாக,மீண்டும் பல அலுவலகங்கள் முன்னதாகவே மூடப்பட்டன.

“40′ டிக்கெட் கேட்ட ராஜபக்சே

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான பைனலைப் பார்க்க, நேற்று மும்பை வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, தன்னுடன் பெரிய கூட்டத்தை கூட்டி வந்தார். இவருடன் ஒருசிலரை மட்டும் எதிர்பார்த்த மாநில அரசுக்கு இது பெரும் சிக்கலாகி விட்டது. தவிர,தனக்கு, கிரிக்கெட்டை பார்க்க 40 “பாஸ்’ வேண்டும், என அடம்பிடிக்க, இந்திய வெளியுறவுத் துறைக்கு தர்மசங்கடமாகியது.

ஜாகிர் கான் ஏமாற்றம்

கடந்த 2003 உலக கோப்பை பைனலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஓவரை ஜாகிர் கான் வீசினார். இதில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்,நேற்றைய போட்டியின் முதல் ஓவரை ஜாகிர் கான் வீசினார். இம்முறை சுதாரித்த இவர், “மெய்டனாகி’ வீசி அசத்தினார். ஆனால் கடைசியாக வீசிய, தனது 3 ஓவரில், 44ரன்கள் கொடுத்து ஏமாற்றினார்.

ஒரு பவுண்டரிக்கு ரூ. 25 ஆயிரம்

உலக கோப்பை தொடரின் பைனலில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு பவுண்டரி, சிக்சருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது உலகளவில் <உள்ள, பின் தங்கிய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான, புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

ரூ. 1 கோடி பரிசு

உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு, பரிசு மழை குவிகிறது. பி.சி.சி.ஐ.,சார்பில் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படுகிறது. தவிர,பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் உட்பட மற்ற அனைத்து சக உதவியாளர்களுக்கும் தலா ரூ. 50 லட்சம், அணியின் தேர்வுக்குழுவினருக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை தரப்படுகிறது.
கார் பரிசு: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு, ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான “வெர்னா’ என்ற காரை, பரிசாக தர முன்வந்துள்ளது. இதன் படி, சுமார்7 முதல் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கிறது.

பெருமைப்படத்தக்க தருணம்: சச்சின்

கடந்த ஐந்து உலக கோப்பை தொடர்களில் பங்கேற்ற சச்சின், இடம் பெற்றிருந்த இந்திய அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. ஆறாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற சச்சின், முதன் முறையாக உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற பெருமை பெற்றார். இதுகுறித்து சச்சின் கூறுகையில்,”” இது எனது வாழ்நாளின் மிகச் சிறந்த பெருமைப்படத்தக்க தருணம். வரலாற்று சிறப்புமிக்க திறமையை, வெளிப்படுத்தி,அசத்திய இந்திய வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,” என்றார்.

அனைத்துமே சச்சினுக்காக…

உலக கோப்பை வென்றது குறித்து இந்திய அணி வீரர் காம்பிர் கூறுகையில்,”” கோப்பை வென்றதற்கான அனைத்து பாராட்டுகளும் சச்சினுக்குத்தான். ஏனெனில், நாங்கள் அனைவரும் அவருக்காகத்தான் விளையாடினோம். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தற்போது இலங்கையை வீழ்த்தியது எல்லாம் சச்சினுக்காகத்தான்,” என்றார்.

பைனலில் சாதித்தேன்: தோனி

இலங்கைக்கு எதிரான பைனலில் ஆட்ட நாயகன் வென்ற கேப்டன் தோனி கூறுகையில்,”” பைனலில் கோப்பை வெல்லவில்லை என்றால், பல கேள்விளுக்கு பதில் சொல்ல வேண்டியது இருந்திருக்கும். ஏன் அஷ்வினை சேர்க்கவில்லை, ஏன் ஸ்ரீசாந்தை அணியில்சேர்த்தீர்கள், ஏன் யுவராஜ் சிங்கை முதலில் பேட் செய்ய அனுப்பவில்லை என, பல கேள்விகள் எழுந்திருக்கும். இவை எல்லாம் சேர்ந்து தான் என்னை சிறப்பாக விளையாடத் தூண்டியது. கடந்த போட்டியில் சரியாக விளையாடாததால், நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பைனலில் முன்னதாக களமிறங்க வேண்டும் என, பயிற்சியாளரும்,சீனியர் வீரர்கள் பலரும் விரும்பினர். கடைசியில் என்னை நிரூபித்தேன். முன்னதாக,பனிப்பொழிவும் சற்று கைகொடுக்க, காம்பிரும், விராத் கோஹ்லியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் எதிரணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றி பெற முடிந்தது,” என்றார்.

சொந்த மண்ணில் சாதனை

சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

மனைவி வந்த நேரம்

நேற்று அரங்கில் இருந்தவாறு தனது கணவரை பார்த்து நீண்ட நேரம் களத்தில் இருந்து பேட் செய்யும்படி சைகை செய்தார் ஜெயவர்தனாவின் மனைவி. இதன்படி அசத்தலாக ஆடிய அவர் சதம் கடந்தார்.

பூணம் பாண்டே “ரெடி

இந்திய அணி கோப்பை வென்றால் பிறந்தமேனியாக வலம் வர தயார் என மும்பை மாடல் அழகி பூணம் பாண்டே சவால் விடுத்திருந்தார். இது குறித்து 20 வயதான இவர் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு எழுதிய கடிதத்தில்,””பி.சி.சி.ஐ., அனுமதி அளிக்கும்பட்சத்தில் திட்டமிட்டபடி நிர்வாணமாக வலம் வருவேன். எனக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து கவலை இல்லை,”என்றார். தற்போது இந்திய அணி உலக கோப்பை வென்றுள்ள நிலையில், பூணத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பேட்உடைந்தது

நேற்று 38வது ஓவரில், மலிங்கா அசுர வேகத்தில் வீசிய பந்தை காம்பிர் அடித்த போது,அவரது பேட்டின் நுனிப்பகுதி உடைந்தது. பின் புதிய பேட் பயன்படுத்தி ரன் வேட்டையை தொடர்ந்தார்.

நாடு முழுவதும் கொண்டாட்டம்

இந்திய அணி, உலக கோப்பை வென்றதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இரவெல்லாம் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதித்த இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top