அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் இரண்டு செல்போன் திருடர்கள் வினோதமான முறையில் போலீசிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஒருவரின் வாகனத்தில் இருந்து அவரது ஐபேடு, ஆயிரக்கணக்கான டாலர் பணம் மற்றும் இதர எலெக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்றனர்.
திருடிய ஐபேடில், திருட்டு பணத்தை காண்பித்தபடியே தங்களைத் தாங்களே ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். பிறகு அந்த படத்தை விவரம் அறியாமல், ஒரு ஐகிளவுடு கணக்குக்கு அனுப்பினர். ஆனால், அது, ஐபேடை பறி கொடுத்தவரின் கணக்கு ஆகும். பறிகொடுத்த அவர், தன்னிடம் திருடப்பட்ட பொருட்கள், புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளதை பார்த்தார். அந்த படத்தை வலைத்தளங்களிலும், பத்திரிகையிலும் வெளியிடச் செய்தார். அதன்மூலம், இரண்டு திருடர்களையும் போலீசார் கைது செய்தனர்.