Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா

எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா

தனியாக இருக்கிறீர்களா? உங்களுக்கு என தோழி இல்லையா? கவலை வேண்டாம் என்கிறது ஒரு வெப்சைட். ஆச்சர்யத்துடன் உள்ளே நுழைந்தால்,  உருகி உருகிக் காதலிக்க காதலி தருகிறோம் என்கிறார்கள்.

மாத்யூ ஹோமேன், அமெரிக்காவில் வழக்கறிஞர். ஏழு வருடங்களுக்கு முன் விவாகரத்து ஆனது. அதன் பின் தனித்துவிடப்பட்டதைப் போல உணர்ந்த மாத்யூவுக்கு தன் பெர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தோழியிருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. விவாகரத்து தந்த கசப்பினால் வெர்ச்சுவல் காதலியாக இருந்தால் தேவலை என்று தோன்றியது. அப்போது உதித்த ஐடியாவே இந்த ‘இணைய தோழி’. உடனடியாக இன்விசிபிள் கேர்ள் ஃப்ரெண்ட், இன்விசிபிள் பாய் ஃப்ரெண்ட் என்கிற இரண்டு வெப்சைட்டையும் பதிவு செய்திருக்கிறார்.

பின்னர் வேலை நெருக்கடியில் இந்த விஷயத்தை மறந்துவிட்டாராம். 2013-ல் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் புதிய சிந்தனைகளுக்கான போட்டியில் இவருடைய இணையதளம் ஐடியா முக்கியமான ஒன்றாக அறிவிக்கப் பட்டது. தொழில்நுட்ப ரீதியாகவும் நிதியுதவி செய்யவும் ஆட்கள் கிடைத்தனர்.

“ஆண் தோழர் வேண்டுமானாலும் பெண் தோழி வேண்டுமானாலும் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் கேட்கும் முதல் தகவல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்ட பின் மாதம் ஒன்றுக்கு 25 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் வெர்ச்சுவல் காதலிக்கென தனி மொபைல் எண் இருக்கும். அதிலிருந்து மாதம் 100 எஸ்.எம்.எஸ்-களும் வாய்ஸ் மெசேஜ்களும் கைகளால் எழுதப்பட்ட காதல் கடிதங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு மொபைலுக்கு வரும்” என்கிறார் மாத்யூ.

 “உண்மையில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்யப்போவது உயிரும் சதையுமாய் இருக்கும் பெண்தான். இதற்கென முன்னணி பி.பி.ஓ நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து சிறப்புப் பணியாளர்கள் தேர்வுசெய்து பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அவர்கள் யாரென்று உங்களுக்கும் நீங்கள் யாரென்று அவர்களுக்கும் தெரிய வாய்ப்பேயில்லை. உங்கள் மனக்காயத்துக்கு ஆறுதல் சொல்வார்கள். ஆசைகளையும் கவலைகளையும் வெளிப்படுத்திக்கொள்ள ஒரு நபர். இதற்குக் கட்டணமாக நீங்கள் செலுத்துவது, உண்மையில் காதலியோ கேர்ள் ஃப்ரண்டோ இருந்தால் ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்குதான்” என்று சிரிக்கும்  மாத்யூ இப்பவும் சிங்கிள்தானாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top