Home » பொது » இது விளையாட்டு அல்ல !
இது விளையாட்டு அல்ல !

இது விளையாட்டு அல்ல !

இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது சில வித்தியாசமான ஆன்லைன் கேம்கள் கண்ணில் பட்டன. பொது நலன் கருதி அதைக் குறிப்பிடலாம் என்றால், குழந்தைகள் நலன் கருதி அந்தப் பெயரை மாற்றித் தருகிறேன். என்ன ஒரு கிரியேட்டிவிட்டிடா!

பமீலா ஹாட் கிஸ்ஸிங் கேம்: பமீலானு ஒரு பாப்பா கோவா மாதிரியான ஒரு பீச்ல டூ பீஸ்ல மல்லாந்து படுத்துக் கெடக்கு. பக்கத்துல போயி  உங்க மெளஸை எந்த இடத்துல கிஸ் பண்ணணுமோ அங்கே போய் நகர்த்தி வெச்சு லெஃப்ட் க்ளிக் கொடுத்தீங்கனா, அந்தப் பொண்ணு நீங்க கொடுக்கிற கிஸ்ஸுக்கும் ஒரே நேரத்துல எத்தனை வாட்டி வேகமா ரைட் க்ளிக்கையும் அதையும் சீரா கொடுக்கிறீங்களோ, அந்த அளவுக்கு உடம்பு சிலிர்க்கும். பக்கத்துல இருக்கிற ஒரு பையன் உங்களைத் திரும்பித் திரும்பி உர்ருனு பார்த்துக்கிட்டு இருப்பான். அவன் அங்கிட்டு திரும்புறதுக்குள்ள சோலியை முடிச்சா பாயின்ட்டுகள் கூடும். அவன் உர்ருனு உத்துப் பார்க்கிறப்போ, நீங்க ரொம்ப நேரமா பமீலா புள்ளைக்கு கிஸ் அடிச்சீங்கனா, அவன் காதுல இருந்து புகை கிளம்பும். அதிகமா புகை கிளம்புனா கேம்ல இருந்து நீங்க அவுட். என்னா வில்லத்தனம். இதுக்கு டைமர் வேற செட் பண்ணி வெச்சிருக்காய்ங்கே. நாங்க என்ன பாவம் பண்ணினோம்னு கேர்ள்ஸ் கூப்பாடு போடுவாங்கனு நினைச்சாங்களோ என்னவோ, ஆண் படுத்துருக்கிற மாதிரியும் பெண் வந்து கிஸ் பண்ற மாதிரியும் இன்னொரு வெர்ஷனும் இதுல இருக்கு. ம்ம்ம்ம்ம்ம்!

பீச் கிஸ் கேம்: ஆணோ பெண்ணோ ஆளுக்கொரு முறை வைத்துக்கொண்டு பீச் கூட்டத்துக்கு நடுவே மற்றவர்கள் பார்க்கும்போது விலகியும் பார்க்காத தருணத்தில் மௌஸை நகற்றி அருகில் வந்து லெஃப்ட் க்ளிக் கொடுத்தால் ‘பச்சக்’ கிஸ் ரெடி. மற்றவர்கள் பார்த்துவிட்டால் நீங்கள் அவுட். மூன்று நிமிடங்களில் நீங்கள் 30 முத்தங்களைத் தாண்டினால் அடுத்த லெவலுக்குப் போவீர்கள். அடப்பாவிகளா!

ஸ்பைடர் மேன் கிஸ்ஸிங் கேம்: ஸ்பைடர் மேன் மேலிருந்து தொங்கிக் கீழே நிற்கும் பெண்ணை கிஸ் பண்ண வேண்டும். வினோதமான ஊசலாட்டத்தில் பேலன்ஸ் தப்பாமல் கிஸ் அடித்தால் பாயின்ட். இடையில் ஸ்பைடர்மேனுக்கு வில்லனாக சில எதிரிகள் வருவார்கள். அவர்களை மிதித்துவிட்டு வந்து லிப் லாக் செய்தால் வெற்றி. இல்லை என்றால், ஆட்டத்தை மறுபடித் தொங்கலில் ஆரம்பிக்க வேண்டியதுதான். ஆஹா!

ஸ்லீப்பி சோல்ஸ் டிக்ளிங் கேம்ஸ்: அழகான பெண் போர்வை போர்த்திக்கொண்டு வெல்வெட் கட்டிலில் தூங்கிக்கொண்டிருப்பாள்.

உங்கள் கையில் ஒரு பறவையின் இறகு கொடுக்கப்படும். நீங்கள் மௌஸை வைத்து நகர்த்தி, போர்வைக்கு வெளியே எட்டிப்பார்க்கும் பாதப் பிரதேசங்களை வருடிக் கொடுக்க வேண்டும். அந்த ஸ்லீப்பிங் பியூட்டி அம்புட்டு சீக்கிரத்தில் எழுந்திருக்க மாட்டாள். விரலால் ஈ ஓட்டியது போல அவள் பாட்டுக்கு தேமேவென படுத்துக் கிடப்பாள். நீங்கள் இன்னும் ஃபோர்ஸாக தினுசு தினுசாக இறகால் வருடி அவளைக் கண் விழிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் பாதி கேம் உங்கள் பக்கம். அதன்பிறகு சின்னச் சின்ன வருடல்களுக்கும் சிரிப்பாள். சிலவற்றுக்கு பெரும் சிரிப்பு. சிலவற்றுக்கு லேசான சிரிப்பு. சிரிப்புக்குத் தகுந்தபடி பாயின்ட்டுகள் உங்களுக்குக் கிடைக்கும். இதெல்லாம் ஒரு பிழைப்பானு கேட்கக் கூடாது!

ஸ்பான்க் தி பூட்டி கேம்ஸ்: ஒரு பின்னழகு காட்டி நிற்கும் அழகியின் பின்புறத்தில் கைகளால் ஓங்கி அறைந்து அவளை அலறவிடும் கொடூர மனம் கொண்டவர்களுக்கான கேம் இது. வலிக்கும்படி அறைந்தால் நீங்கள் அவுட். அதே சமயத்தில் ரொம்பவும் மெதுவாய் அறைந்தால் மைனஸ் பாயின்ட். அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணுமாம். ஸ்ஸ்ஸ்ஸ்….!

பார்பி மஸாஜ்: பிடித்த மாதிரி மஸாஜ் செய்தால் பாயின்ட். இல்லை என்றால் கோவிந்தா கோவிந்தா!

செக்ஸி கேர்ள் டேட்டிங் கேம்: பார் ஒன்றின் சூழலில் நிற்கும் ஒரு பெண்ணை என்டர் ஆகி அவளுக்குப் பிடித்த பொருட்களை சரியான டைமிங்கில் எடுத்துக் கொடுத்து கைகோர்த்து தனியாக அழைத்துச் செல்லும் கேம். உங்களைவிட சில மங்கூஸ் மண்டையன்களை உள்ளே அனுப்பி அவர்கள் பக்கம் அந்தப் பெண் திரும்பி மயங்கி அவர்களோடு செல்வதற்குள் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பி எப்போதும் உங்களையே பார்த்தபடி செய்த வண்ணம் இருக்க வேண்டும். உண்மையில் மிகக் கஷ்டமான கேம் இதுதான்!

இது தவிரவும் சில கேம்கள் இருக்கு பாஸ். அதெல்லாம் விளையாண்டா சாமி சத்தியமா கண்ணைக் குத்தும்!

யம்மாடி ஆத்தாடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top