தேம்ஸ் நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம்
இங்கிலாந்தில், புகழ்பெற்ற தேம்ஸ் நதி பாய்கிறது. லண்டன் நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பாயும் இந்த நதி, இங்கிலாந்தின் நீளமான நதி என அறியப்படுகிறது. இந்த நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நீச்சல் குளம் விக்டோரியா பகுதியில் அமைக்கப்படுகிறது. 25 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்த குளத்தில், வடிகட்டும் அமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் என அனைத்து பணிகளுக்காக 10 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.95 கோடி) செலவிடப்படுகிறது.
இந்த குளத்தை வடிவமைப்பதற்காக லண்டன் கட்டிடக்கலை நிபுணர்கள் முதற்கட்ட பணிகளை தொடங்கி விட்டனர். இந்த குளம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.