போன் பேசிவிட்டு “அத்தே!” என்று கூப்பிட்டுக்கொண்டு அறைக்குள் கீதாம்பரி நுழையவும், ஜன்னல் பக்கமாய்த் திரும்பி நின்று சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்த திலகம் அவசர அவசரமாய்க் கண்களைச் சேலைக் தலைப்பால் துடைத்துக்கொண்டு, கட்டாயப் புன்னகையை வாடகைக்கு வாங்கியபடி திரும்பினாள். “வாம்மா!” திலகத்தின் முகத்தைப் பார்த்துவிட்டுக் கீதாம்பரியின் பிறைநெற்றி ஸ்டிக்கர் பொட்டோடு சுருங்கியது. “என்ன அத்தே! கண்ணெல்லாம் சிவந்திருக்கு… அழுதீங்களா?” “சேச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்லை. பாழாப்போன ஒத்தைத் தலைவலி காலையிலிருந்து ஆரம்பமாயிடுச்சு. வெளிச்சத்தைப் பார்த்தாப் போதும் கண்ணெல்லாம் கூசி தண்ணியாக் கொட்டுது.” “மாத்திரை ... Read More »
Daily Archives: February 5, 2015
நீல நிற நிழல்கள் (7)
February 5, 2015
ஜோஷி சொன்னதைக் கேட்டுச் சதுர்வேதி தன் சதைப் பற்றில்லாத உதடுகளை விரித்து அகலமாய்ப் புன்னகைத்தார். “மிஸ்டர் ஜோஷி! நீங்க இப்போ சொன்னது நடக்கப் போகிற நிஜம். உங்க மகனை மூளைக்கோளாறிலிருந்து குணப்படுத்தறதுக்காக நான் மேற்கொண்டிருக்கிற இந்த ஜீன் ட்ரான்ஸ்ஃபர் எக்ஸ்பரிமெண்ட்ஸில் நான் ஆரம்பக் காலத்தில் சந்தித்த தோல்விகள் இப்போது இல்லை. சோதனையான எவ்வளவோ கட்டங்களைத் தாண்டி வந்துட்டேன்.” “டாக்டர்! எனக்கு ஒரு பயம்…” “என்ன…?” “உங்க ஆராய்ச்சி முடியறதுக்குள்ளே என் மகன் நகுலுக்கு மூளைக்கோளாறு அதிகமாயிட்டா அதுக்கப்புறம் ... Read More »
நீல நிற நிழல்கள் (6)
February 5, 2015
பெரிய குங்குமப்பொட்டோடு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் சிரித்த அண்ணி கீதாம்பரியைப் பார்த்ததும் ரமணியின் கண்களை நீர் கீறியது. இதயத்தின் ஓரம் அறுபட்டது. ரமணியின் தோளைத் தொட்டார் மல்ஹோத்ரா. “போட்டோவில் இருக்கிறது மிஸஸ் ஹரிஹரன்தானே?” ரமணி தலையசைத்தான். “எனி கிட்ஸ்…?” “நவ் ஷீ ஈஸ் கேரியிங்.” “பாப்ரெ!” நெற்றியைக் கீறிக்கொண்டார். ரமணி, தொண்டையடைக்கிற குரலில் கேட்டான். “பாடி எப்போ கிடைக்கும் சார்?” “இன்னும் போஸ்ட்மார்ட்டம் முடியலை. எப்படியும், பி.எம் முடிஞ்சு உங்க கைக்கு பாடி கிடைக்க சாயந்திரம் ஆறு ... Read More »
நீல நிற நிழல்கள் (5)
February 5, 2015
“வா நிஷா! வெல்கம்!” என்று சிரித்துக்கொண்டே புகை கசியும் வாயோடு சொன்ன சதுர்வேதியைப் பார்த்து உடம்பின் முக்கியப் பாகங்களில் உடைந்தாள் நிஷா. திக்கித்த விழிகளில் பயம் தத்தளித்தது. சதுர்வேதியின் புன்னகை பெரிதாயிற்று. “உன்னை அப்பவே போகச் சொல்லிட்டேனே?” “டா… டாக்டர்… அது… வந்து….” “பத்திரிக்கை ரிப்போர்ட்டர் வேலை மாத்திரம் இல்லாமல் பார்ட் டைமா துப்பறியும் வேலை கூடப் பார்க்கிறே போலிருக்கு?…” “டா… டாக்டர்… வெளியே மழை அதிகமாயிடுச்சு… அதான்…” “ஒண்டிக்கலாம்னு உள்ளே வந்துட்டியாக்கும்?” சொல்லிக்கொண்டே ஒரு பீரோவின் ... Read More »