அக்ஷய் வீட்டில் சாய்ரா பானுவை முதலில் பார்த்தது பீம்சிங் தான். அவன் அவளைப் பார்த்ததும் வெடித்தான். “கொலை செய்ய நீங்களுமா வந்து விட்டீர்கள்?” சாய்ரா பானு ஒரு கணம் கூனிக் குறுகிப் போனாள். ஆனால் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்றாள். பீம்சிங் கடுமை குறையாமல் கேட்டான். “என்ன வேண்டும்?” சாய்ரா பானு பலவீனமான குரலில் சொன்னாள். “எனக்கு அக்ஷயைப் பார்க்க வேண்டும்” பீம்சிங் அவளை உட்காரச் சொல்லவில்லை. அக்ஷயிடம் அவள் வந்திருப்பதைச் சொல்லப் போனான். அக்ஷய் ... Read More »
Monthly Archives: January 2015
அமானுஷ்யன் – 65
January 22, 2015
அதிகாலை நான்கு மணிக்கு தங்கள் காருடன் வேறு இரண்டு டாக்சிகளும் வந்து வாசலில் நின்று ஒலியெழுப்பிய போது தான் இப்ராஹிம் சேட் கண் விழித்தார். அவர் வெளியே வந்து பார்த்த போது சகதேவ் மட்டும் பரிதாபமாக காரில் இருந்து இறங்கி மந்திரித்து விட்டவனைப் போல் நின்றான். அவனை அடையாளம் கண்டு பிடிக்க இப்ராஹிம் சேட்டிற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. குழப்பத்துடன் அவர் அவனிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டார். “நீ எப்படி எங்கள் காரில் இருந்து இறங்குகிறாய்? எப்போது ... Read More »
அமானுஷ்யன் – 64
January 22, 2015
இஸ்மாயில் சொன்னதைக் கேட்டு அவனது சகோதரர்கள் பரபரப்படைந்தார்கள்.. ”என்ன வழி?” இஸ்மாயில் பெருமிதத்துடன் தன் திட்டத்தைச் சொன்னான்…. அக்ஷய் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் பீம்சிங் ஒருவன் தான் இன்னமும் அந்த வீட்டில் வேலை செய்கிறான். நாகராஜன் குடும்பத்திற்கு அவன் மேல் பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவனுக்கு நெருங்கிய உறவினரான சகதேவ் என்கிற இளைஞனை இஸ்மாயில் நன்றாக அறிவான். அந்த சகதேவ் லூதியானாவின் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறான். அவன் மும்பை வரும் போதெல்லாம் பீம்சிங்கைப் ... Read More »
அமானுஷ்யன் – 63
January 22, 2015
முதல் தகவல் ஐந்தாம் நாள் அதிகாலை ஆறு மணிக்கு இப்ராஹிம் சேட்டிற்குக் கிடைத்தது. நாகராஜனை சுட்டுக் கொன்ற நபர்களில் ஒருவனை உடனடியாக ஆஸ்பத்திரிக்குப் போய் அவர் பார்த்தார். உயிர் இருக்கிறது என்பதற்கு அறிகுறியாக அவன் கண்கள் மட்டும் அசைந்தன. மற்றபடி அவன் ஜடம் போல் அசைவற்றுப் படுத்திருந்தான். அவன் கண்களில் பயம் மட்டுமே தெரிந்தது. இப்ராஹிம் சேட் அவன் கூட இருந்தவர்களை விசாரித்தார். வழக்கம் போல் காலை டீ குடிக்க வெளியே சென்றவன் இந்த நிலையில் தெருவில் ... Read More »
அமானுஷ்யன் – 62
January 22, 2015
அக்ஷய் மும்பை வந்து சேர்ந்த போது அவன் பெற்றோர் இருவரும் உயிருக்குப் போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். அக்ஷய் அவர்களைப் பார்க்கும் முன் டாக்டரைப் பார்த்து கேட்டான். “டாக்டர் அவர்கள் இரண்டு பேரும் உயிர் பிழைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? ஏதாவது செய்து காப்பாற்ற முடியுமா?” டாக்டர் அவனை வருத்தத்துடன் பார்த்து சொன்னார். “இல்லை. அவர்கள் இந்த நேரம் வரை பிழைத்திருப்பது கூட மருந்தின் சக்தியால் அல்ல. இறப்பதற்கு முன் உன்னைப் பார்த்தாக வேண்டும் என்று கஷ்டப்பட்டு ... Read More »
அமானுஷ்யன் – 61
January 22, 2015
அக்ஷய் பெரியவனாக வளர ஆரம்பிக்கையில் நாகராஜன் செய்யும் தொழிலை வெறுத்தான். அவன் அதை எப்போதுமே அவரிடம் வாய் விட்டுச் சொன்னதில்லை. ஆனால் சோகம் நிரம்பிய விழிகளோடு சில சமயங்களில் அவர் செயல்களைக் கவனிப்பான். அதை அவரும் திலகவதியும் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அந்தத் தொழில் புலி மேல் செய்யும் பயணம் போலத் தான். பயணத்தை ஆரம்பித்த பின் பிடிக்கவில்லை என்றாலும் நடுவில் இறங்கி விட முடியாது. இதை அவன் ஒரு நாள் புரிந்து கொள்வான் என்று நாகராஜன் ... Read More »
அமானுஷ்யன் – 60
January 22, 2015
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சின்னச் சின்ன வித்தியாசங்களுடன் கூடிய வேஷத்தில் தம்பியைப் பார்க்கையில் ஆனந்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஒரு வேஷத்தில் அவனைப் பார்த்தவர்கள் இன்னொரு வேஷத்தில் அவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம் தான். அக்ஷய் கேட்டான். “எப்படி அவர்கள் பார்வையில் இருந்து தப்பித்து வந்தாய்?” ஆனந்த் தப்பித்த விதத்தை விவரித்து விட்டுப் பின் சொன்னான். “இந்த தடவை அவர்களிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தை நான் உணர்ந்தேன் அக்ஷய். அவர்களிடம் கூடுதலாக ஆக்ரோஷம் இருந்தது. ... Read More »
அமானுஷ்யன் – 59
January 22, 2015
சிபிஐ மனிதன் திகைத்துப் போனான். “என்னது” மந்திரி சொன்னார். “நானும் அதிர்ச்சியோடு இப்படி தான் கேட்டேன். அவர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற மாதிரி வழிகளைத் தேடி அலைகிறார்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்று ஒரு பழமொழியை எங்கம்மா எப்போதும் சொல்வாள். அதற்கு அர்த்தம் இப்போது தான் புரிகிறது” “அமானுஷ்யனைப் பிடிக்கிறார்களோ இல்லையோ இவர்கள் பிடிபட்டு விடுவார்கள் போல் இருக்கிறது.” மந்திரி சிபிஐ மனிதனிடம் சொன்னார். “அந்த அமானுஷ்யனைக் கொன்று விட்டால் எல்லா பிரச்னைகளும் ... Read More »
அமானுஷ்யன் – 58
January 22, 2015
போன் மறுபக்கம் அடித்துக் கொண்டே இருந்தது. யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. அக்ஷய் ஒருவித பரபரப்புடன் காத்திருந்தான். கடைசியில் யாரோ எடுத்தார்கள். “ஹலோ…” – மூச்சு வாங்கியபடி ஒரு ஆண் குரல் கேட்டது. “ஹலோ” என்றான் அக்ஷய். அவன் குரல் கேட்டவுடன் மகிழ்ச்சி பொங்க மறுபக்கத்தில் போன் எடுத்த வயதான மனிதர் சொன்னானர். “அக்ஷய்…..” அந்தக் குரலைக் கேட்டவுடன் அவனை அறியாமலேயே அக்ஷய் சொன்னான். “பீம்சிங்…” “ஏன் அக்ஷய் இவ்வளவு நாளாய் போன் செய்யவில்லை.? நன்றாகத் தானே இருக்கிறாய்?” ... Read More »
அமானுஷ்யன் – 57
January 22, 2015
டெல்லி புறநகர்ப்பகுதியில் இருந்த ஒரு தோட்டத்திற்குள் அந்த மத்திய மந்திரியின் கார் மிக வேகமாக நுழைந்தது. அவர் காரிலிருந்து இறங்கும் போது குறுந்தாடிக்காரன் அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றான். தன் காருக்கு முன்னால் நின்றிருந்த ஆம்புலன்ஸைக் கவனித்த மந்திரி “பிணம் எங்கே?” என்று கேட்டார். “ஆம்புலன்ஸில் இருந்து இன்னும் எடுக்கவில்லை. உங்கள் போலீஸ்காரர்கள் நீங்களோ, போலீஸ் உயர் அதிகாரிகளோ வராமல் பிணத்தை நகர்த்தக் கூடாது என்று பிடிவாதமாக நிற்கிறார்கள். அரை மணி நேரமாகி விட்டது….” அப்போதுதான் மாற்றுடையில் ... Read More »