வீரேந்திரநாத் ஜம்மு விமான நிலையம் இறங்கிய உடனேயே கிடைத்த செய்தி அவரைத் திகைக்க வைத்தது. அவருக்குத் தெரிந்த வரை இன்றைய தினம் பிரதமருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்த தினம். கலந்து கொள்ள பல நிகழ்ச்சிகள் உள்ள தினம். நேரடியாகப் பேச சில முக்கியமான மனிதர்களுக்கு முன்கூட்டியே அனுமதி தந்திருந்த தினம். அப்படி இருக்கையில் அவற்றில் சிலவற்றை ஒதுக்கி விட்டு திடீரென்று கேசவதாஸை அழைக்கிறார் என்றால்…. உடனடியாக ராஜாராம் ரெட்டிக்குப் போன் செய்து தகவலைச் சொன்னார். “… அந்த ... Read More »
Monthly Archives: January 2015
அமானுஷ்யன் – 115
January 22, 2015
மகேந்திரன் தன் நம்பிக்கையைத் தளர விடுவதாக இல்லை. அவன் அந்த இணை அமைச்சரிடம் கெஞ்சும் தொனியில் சொன்னான். “மாமா நீங்கள் மனம் வைத்தால் முடியாதது இல்லை. ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன்.” “நானே நேரில் போனால் கூட பிரதமரை சந்திக்க முடியாது என்கிற அளவுக்கு எல்லாம் இடைவெளி இல்லாத முக்கியமான நிகழ்ச்சிகள் என்கிற போது என்ன செய்வது சொல்?” “மாமா…ஒரு வேளை உங்களுக்கு தனிப்பட்ட அவசரம் ஒன்று இருந்து கண்டிப்பாக பிரதமரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ... Read More »
அமானுஷ்யன் – 114
January 22, 2015
அக்ஷய் குருவிடம் சொன்னான். “குருவே நான் வெளியே போகும் முன் போனில் என் அண்ணனிடம் பேச வேண்டும். உங்கள் போனை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா?” “புத்தரின் போனை பக்தனான நீ தாராளமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” பேச்சுக்காகக் கூட என்னுடைய என்ற சொல்லைப் பயன்படுத்தாத குருவைப் பெருமிதத்துடன் பார்த்த அக்ஷய் புத்த விஹாரத்தின் முன் பகுதி அறையில் இருந்த போனில் அண்ணனின் ரகசிய செல் போனிற்கு போன் செய்தான். “ஹலோ” ஆனந்தின் குரல் ஆவலுடன் ஒலித்தது. அக்ஷய் அண்ணனிடம் ... Read More »
அமானுஷ்யன் – 113
January 22, 2015
வீரேந்திரநாத்தை சந்தித்து ஜம்முவில் பேசிய போது அக்ஷய் அந்த மனிதரின் பதவி, அதிகார ஆசையின் ஆழத்தை முழுமையாக அறிந்து கொண்டான். அவருக்குத் தர வேண்டிய பிரதமர் பதவியை கட்சியின் தலைமைக்குழு இன்னொருவருக்குத் தந்தது தான் உலகத்திலேயே நிகழ்ந்த மிகப்பெரிய அநியாயம் என்று அவர் உண்மையிலேயே நினைத்தார். மிகவும் கண்ணியமான மனிதராகவும், திறமை வாய்ந்தவராகவும் மக்களிடத்தில் பெயரெடுத்திருந்த அவரை விட்டு விட்டு மக்களிடம் பெரும் செல்வாக்கு இல்லாத ஒரு தலையாட்டி பொம்மையை பிரதமர் பதவியில் உட்கார வைத்த தலைமைக்குழு ... Read More »
அமானுஷ்யன் – 112
January 22, 2015
மறுநாள் காலை தலிபான் தலைவர்கள் மூவரும் அக்ஷயைத் தனியாக பேச அழைத்தார்கள். அக்ஷயும் போனான். அவர்கள் மூவர் பார்வையும் அவன் மேல் ஆழமாகப் பதிந்திருந்தது. அவனை ஊடுருவிப் பார்ப்பது போல அவர்கள் பார்த்தார்கள். “என்ன?” என்று அலட்சியமாகக் கேட்டான் அக்ஷய். அவனை எப்போதுமே சந்தேகக் கண்ணோடு பார்த்த தலிபான் தலைவன் தான் முதலில் பேசினான். ” அப்துல் அஜீஸ், இரண்டு வருடங்களுக்கு முன் இங்கிலாந்து பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேரைக் கடத்திக் கொன்றோமே ஞாபகம் இருக்கிறதா?” “ம்..அதற்கென்ன?” “அதில் ... Read More »
அமானுஷ்யன் – 111
January 22, 2015
வீரேந்திரநாத்தின் பிரதமர் பதவி வெறியையும் அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்ததையும் அக்ஷயிடம் சொன்ன தலிபான் தலைவன் தொடர்ந்து சொன்னான். “…. அதைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தீர்மானித்தோம். முதலில் அவருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் மூலம் அவரைத் தொடர்பு கொண்டோம். பேசினோம். இந்தப் பிரதமர் கையாளாகாதவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இன்னும் வலுப்படுகிற மாதிரி ஏதாவது செய்யுங்கள், உங்களுக்கு நானும் உதவுகிறேன் என்றார்….” தலிபான் தலைவன் சொல்லிக் கொண்டே போனான். கேட்கும் ... Read More »
அமானுஷ்யன் – 110
January 22, 2015
அந்த தலிபான் தலைவன் அக்ஷயைத் தங்கள் இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போனான். மற்ற இரண்டு தலிபான் தலைவர்களும் முதலாமவனைப் போல் அல்லாமல் குறைவாகப் பேசுபவர்களாகவே இருந்தார்கள். அவர்களில் ஒருவன் அக்ஷையை மிகவும் கூர்ந்து கவனித்தபடியே இருந்தான். அக்ஷய் அவனிடம் சிறிதும் தயக்கமில்லாமல் புன்னகையுடன் கேட்டான். “ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?” “இந்த தடவை உன்னிடம் நிறையவே மாற்றம் தெரிகிறது” சொன்னவன் அவனை இன்னும் கூர்மையாகப் பார்த்தான். ஆனால் அக்ஷய் முகத்தில் இருந்த புன்னகையில் இம்மியும் குறையவில்லை. “மாற்றம் ஒன்றே ... Read More »
அமானுஷ்யன் – 109
January 22, 2015
அக்ஷயைப் பொறுத்த வரை காலம் நின்று போனது போலிருந்தது. காற்றில் மிதப்பது போன்ற உணர்வில் அவன் எத்தனை நேரம் இருந்தானோ அவனுக்குத் தெரியாது. தலையில் ஏதோ ஒரு இறுக்கம் லேசானது போல உணர்ந்தான். அவன் முயற்சி இல்லாமலேயே மறந்து போயிருந்த பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தன…. ஒரு நாள் அவனிடம் பேச வந்த ஆச்சார்யா முகத்தில் ஆழ்ந்த கவலை இருந்தது. “என்ன ஆயிற்று சார்?” அக்ஷய் கேட்டான். உடனடியாக அவர் பதில் ... Read More »
அமானுஷ்யன் – 108
January 22, 2015
ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் பட்டாளம் வந்திறங்கியதை அக்ஷய் தொலைவில் இருந்தே கவனித்தான். அந்த டாக்சி மட்டும் வழியில் நின்று விட்டிருக்கா விட்டால் இன்னேரம் அவர்களிடம் அகப்பட்டிருக்கக் கூடும் என்பதை உணர்ந்த போது அவன் மனம் ஒரு கணம் கடவுளுக்கு நன்றி செலுத்தியது. எங்கிருந்தோ அவனுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் அவன் தாயின் பிரார்த்தனையின் பலன் தான் இது என்று நினைத்துக் கொண்டான். அதே நேரம் நாட்டையே காப்பாற்றக் கூடியதாக அவன் நினைத்திருந்த ஒரு பெரிய ... Read More »
அமானுஷ்யன் – 107
January 22, 2015
சலீம் உடனடியாக சற்று தள்ளிச் சென்று லாட்ஜ் ஆசாமிக்குப் போன் செய்தான். எடுத்தவுடன் லாட்ஜ் ஆசாமி கேட்டான். “அந்த சைத்தான் கிடைத்து விட்டானா?” சலீம் சொன்னான். “கிடைத்து விட்டான். வெறுமனே அவனைக் கொல்வது என்றால் இதற்கு முன்னாலேயே நான் கொன்றிருப்பேன். அவனிடம் ஏதோ ரகசியம் கறக்க வேண்டும் என்று சொன்னதால் தான் செய்யவில்லை. இப்போது அவன் அந்த ரகசிய ஆதாரங்கள் வைத்து இருக்கும் இடம் எனக்குத் தெரிந்து விட்டது.” லாட்ஜ் ஆசாமி பரபரப்புடன் கேட்டான். “எங்கே” “ஜம்முவில் ... Read More »