Home » 2015 » January (page 12)

Monthly Archives: January 2015

அமானுஷ்யன் – 26

அந்தச் செய்தித்தாளில் பார்த்த புகைப்படம் அக்‌ஷயிற்கு நல்ல பரிச்சயமான முகம். ஆனால் அந்தப் புகைப்படம் அவனுக்கு வேறெந்த நினைவையும் ஏற்படுத்தவில்லை. அந்தப் புகைப்படத்துடன் வந்த செய்தியை அவன் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தான். அந்த மனிதர் பெயர் ஆச்சார்யா என்றும், அவர் சிபிஐயின் அடிஷனல் டைரக்டர் என்றும் அவர் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டதாகவும் அவரைக் கொன்ற கொலையாளியிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் எழுதியிருந்தது. அவரைக் கொன்ற தேதிக்கு மறுநாள் தான் அவனையும் யாரோ கொல்ல முயற்சி ... Read More »

அமானுஷ்யன் – 25

சஹானா வேலைக்கும், வருண் பள்ளிக்கும் சென்று விட்டார்கள். வீட்டில் அக்‌ஷயும், மரகதமும் மட்டுமே இருந்தார்கள். பக்கத்து வீட்டு பஞ்சாபிக்காரர் ஜெய்பால்சிங் வந்து அரைமணி நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அவனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்க அவன் சிறிதும் தயக்கமில்லாமல் உளறாமல் எல்லாவற்றிற்கும் பதில் சொன்னான். ஒரு உண்மை கூட சொல்லாமல், பொய் என்பதை அவர் அறியாதபடி சுவாரசியமாக அவன் சொன்ன விதம் மரகதத்தை வியக்க வைத்தது. தான் இப்போது இருப்பது அலகாபாத்தில் என்றும் அங்கு ஒரு ... Read More »

அமானுஷ்யன் – 24

அந்தக் காவல் நிலையத்தில் நுழைந்த அந்தக் கிராமத்தானைப் பார்த்து “யார் நீ, என்ன வேண்டும்” என்று ஒருவரும் கேட்கவில்லை. இத்தனைக்கும் யாரும் எந்த முக்கியமான வேலையிலும் இருக்கவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் திருதிருவென்று விழித்தபடி உள்ளே நுழைந்த அந்த கிராமத்தான் யாராவது தன்னைப் பார்ப்பார்களா என்று பொறுத்துப் பார்த்தான். ஆனால் அவனைக் கவனித்தாலும் பெரிய முக்கியத்துவம் எதுவும் தர வேண்டியதில்லை என்பது போல முன் மேசையில் இருந்த ஒரு போலீஸ்காரன் தன்னருகே நின்றிருந்த இன்னொருவனிடம் சொந்தக் ... Read More »

அமானுஷ்யன் – 23

“ஹலோ சஹானா” மதுவின் குரல் பரபரப்பாகக் கேட்டது. “சொல்லு மது” “அவன் இருக்கிறானா?” “இல்லை. வெளியே போயிருக்கிறான்.” “எங்கே?” “அவனாகச் சொல்லவில்லை. நானாகக் கேட்கவில்லை” “ஒவ்வொரு நாளும் இரவானால் வெளியே போகிறான். இன்று போனது எங்கே என்று உனக்குத் தெரியவில்லை. நேற்று போனவன் என்ன செய்தான் என்றும் தெரியவில்லை. அவனைத் தீவிரவாதி என்று போலீஸ் வேறு தேடுகிறது. நீ ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறாய் சஹானா, தெரியுமா?” “மது. எனக்குப் புரிகிறது. ஆனால் என் மகன் ... Read More »

அமானுஷ்யன் – 22

அவன் காலை எழுந்தவுடன் மீசையை மழித்துக் கொண்டான். கண்ணாடியில் பார்க்கையில் இன்னும் வித்தியாசமாகத் தெரிந்தான். பக்கத்து வீட்டு ஜெய்பால்சிங் செய்தித்தாளை வாங்கும் சாக்கில் வந்தவர் அவனை வித்தியாசமாய் பார்த்தார். “அக்ஷய் உங்களுக்கு என்ன ஆயிற்று?” அவன் கண்ணடித்துக் கொண்டே சொன்னான். “ஒரு பந்தயத்தில் தோற்று விட்டேன்…” அவர் வாய் விட்டு சிரித்தார். “என்ன பந்தயம்….?” “அது வெளியே சொல்ல முடியாத பந்தயம்… ” என்று பிடி கொடுக்காமல் பேசிய அக்ஷய் செய்தித்தாளில் என்ன விசேஷம் என்று கேட்க ... Read More »

அமானுஷ்யன் – 21

அக்ஷய் கதவைத் தட்டியவுடன், தூக்கக் கலக்கத்துடன் உள்ளேயிருந்து குரல் கேட்டது. “யாரது?” அக்ஷய் அமைதியாகச் சொன்னான்,”போலீஸ்”. சொல்லிக் கொண்டே தன் கண்ணாடியைக் கழற்றி சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். தலைமுடியை பழையபடி வாரிக்கொண்டான். விளக்கைப் போட்டு அவசர அவசரமாக ஒரு ஆள் கதவைத் திறந்தான். அந்தச் சிறுவனின் தந்தையாக இருக்க வேண்டும் என்று அக்ஷய் அனுமானித்தான். அந்த ஆள் வந்தது போலீஸ் அல்ல என்று உணர்வதற்குள் அக்ஷயின் வலது கை, அவன் கழுத்துப் பகுதிக்கு மின்னல் வேகத்தில் விரைந்தது. ... Read More »

அமானுஷ்யன் – 20

சஹானா அக்ஷயை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவன் முகத்திலோ ஒரு அசாதாரணமான அமைதி தெரிந்தது. “என்ன அக்ஷய் அநியாயமாய் இருக்கிறது. நீங்கள் அந்தப் பையன் சொன்ன நேரத்தில் இமயமலைச் சாரலில் இருந்தீர்கள். வருணைக் காப்பாற்றினீர்கள். உங்களை டில்லியில் ஏதோ வெடிகுண்டு வைத்து விட்டுப் போனீர்கள் என்று அந்தப் பையன் பொய் சொல்கிறான். நீங்களும் அமைதியாக இருக்கிறீர்கள்” “சஹானா அவர்களுக்கு எதனாலோ என்னைப் பிடித்தாக வேண்டும் என்கிற அவசரம் தெரிகிறது. அதற்கு சட்டபூர்வமான வழிகள் எதுவும் அவர்களுக்கு தென்படவில்லை போல் ... Read More »

அமானுஷ்யன் – 19

அவன் ஒரு மேக்கப் சாதன கடையருகே காரை நிறுத்தச் சொல்லி உள்ளே போய் சில பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்தான். வரும் போது ஒரு காதில் இக்காலக் கல்லூரி இளைஞர்கள் போடும் ஒரு சிறு வளையம் இருந்தது. அவன் நடையே மாறி இருந்தது. மிக இளையவனாகத் தெரிந்தான். அவன் காரில் ஏறும் முன் யாரோ ஒரு வழிப்போக்கன் ஏதோ கேள்வி கேட்க நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஏதோ பதில் சொன்னான். அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கண்டு சஹானா திகைத்தாள். ... Read More »

அமானுஷ்யன் – 18

லலிதா திகைப்புடன் கேட்டாள், “என்ன ஆயிற்று?” அப்போதுதான் ஆனந்த் தான் எழுந்து நின்றிருப்பதை உணர்ந்தான். அவன் மனதை ஏதோ அழுத்தியது. அவன் இதயம் படுவேகமாக அடித்துக் கொண்டிருந்தது. “ஒன்றுமில்லை…” என்று சொல்லி விட்டு மீண்டும் உட்கார்ந்தான். வந்த கணம் முதல் அமைதியே வடிவாக இருந்த அவன் இப்படி திடீரென்று மாறியதைப் பார்த்த லலிதா அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சந்தேகப்பட்டாள். “நான் டாக்டரைக் கூப்பிடட்டுமா?” அவன் அவசரமாகச் சொன்னான், “வேண்டாம்… வேண்டாம்” ஆனாலும் அவள் விரைந்து சென்று ... Read More »

அமானுஷ்யன் – 17

சஹானா ஒரு ரெடிமேட் ஷோரூம் முன்பு காரை நிறுத்தினாள். அவனை ஆடைகள் வாங்கிக் கொள்ளச் சொன்னாள். அவன் ஆடைகள் தேர்ந்தெடுத்த வேகத்தைக் கண்டு அவள் அசந்து போனாள். பெண்கள் அளவுக்கு ஆண்கள், உடைகளைத் தேர்ந்தெடுக்க நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்ற போதும் இந்த அளவு மிகக் கச்சிதமான ஆடைகளை மிகக்குறுகிய நேரத்தில் தேர்ந்தெடுக்கிற ஆண்களை அவள் இது வரை பார்த்ததில்லை. பின் அவளே பில் பணத்தைக் கட்டினாள். அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஒருவரிடம் எவ்வளவு உதவிதான் பெறுவது! ... Read More »

Scroll To Top