Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » மறந்து போன நம் பெருமை!!!

மறந்து போன நம் பெருமை!!!

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

“பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டிவிடும் படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்”. பிற்காலத்தில் தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். 

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.

கிரேக்கத்தில் பாண்டியன் – 1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் ‘மருதை’ என்ற ஊர் உள்ளது. “சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்” அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.

பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன.

பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.

கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு.

இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.

பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தகடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தி உள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்படவேண்டும்.

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்க ப்பட்டவையே மாமல்ல புரம் குடைவரைக் கோயி ல்கள்.மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி . கோபுரத்தை தாங்கும் வகை யில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன .மாமல்ல புரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோவாட் கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்ப ற்றிய போதுஅங்கு உள்ள அங்கோவாட் என்ற இடத்தில இக் கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களி லேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்க. இந்த கோயி லின் நான்கு பக்க பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை .40 ஆண்டு களில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.இக் கோயி லின் முழு உருவத்தை காண வானத்தி ல் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப் படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் பதிவாகும்.

கடல் நடுவே ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலை களோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள்,590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற் கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க் முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெரு வுடையார் கற்கோயிலை அருள் மொழித் தேவன் எவ் வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை (விமானத்தை)எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே .ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்து ள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை..அருள் மொழித் தேவன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப் பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள் ளது.ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.பன்னெடுங் காலத்திற்கு முன் இயற் றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பி டுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற் செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

உலகின் தொன்மையான நகரம் பூம்புகார்:-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற் கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும் கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில மூழ்கின.

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ் சதரோ நாகரிகங்களை விடப் பழமை யானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியு ள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப் பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன.இவர் கண்டறிந்த உண்மையை டர்காம் பழகலைக் கழகம் உறுதி செய்துள்ளது.இதற்கு அமெரிக்க ஆங்கில தொலை காட்சி நிறுவனகள் பொருளாதார உதவி செய்துள் ளன. இவை அமெரிக்க தொலைகாட்சிகளில் ஒளிபரப்பட்டன. இதுவரை உலக அகழ்வு ஆராய்ச்சி யாளர்கள் இதை மறுக்கவில்லை. ஆரிய இந்திய அரசு இதை ஒளிபரப்ப மறுத்து விட்டது .

உலகை கட்டி ஆண்ட தமிழன:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப் படுதிய்தே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப் படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம் மக்களை அடிமை படுத்தாது சிறப்பான் ஆட்சி புரிந்து, அம மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்த வர்கள் தமிழர்கள் என்பதை, வரலாற்றை யும் இலக்கியங்களையும் எடுத்துகாட்டாக முன் வைத்து நம் மக்கள் உணரும் வகையில் செய்வதன் மூலமே திராவிட கருத்துக்களில் சிக்கி தன இனத்தை தானே அவமானப் படுத்தி பேசும் வழமை யை அகற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top