Home » 2015 » January » 22 (page 5)

Daily Archives: January 22, 2015

அமானுஷ்யன் – 85

ராஜாராம் ரெட்டி பயபக்தியுடன் நீட்டிய அந்த பிரசாதத்தை ஜெயின் பார்த்தார். பார்க்க பஞ்சாமிர்தமாகவும் இல்லாமல், அல்வா போலவும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு நிலையில் அந்த பிரசாதம் இருந்தது. வாங்கிய ஜெயின் காளிதேவியை நினைத்து வணங்கியபடி அந்த பிரசாதத்தை எடுத்து வாயில் கண்களை மூடிப் போட்டுக் கொண்டார். சுவை என்னவோ போல் இருப்பதை ஜெயின் உணர்ந்தார். அந்த சுவையால் ஜெயின் முகம் ஒரு மாதிரியாகப் போனதைக் கவனித்த ரெட்டி அவர் அதைத் துப்பி விடப் போகிறாரோ என்று பயந்தார். ... Read More »

அமானுஷ்யன் – 84

அக்ஷய் மகேந்திரனை இன்னமும் சந்தேகத்துடனேயே பார்த்தான். “பொய் சொன்னால் என்னிடம் தண்டனை என்ன தெரியுமா?” மகேந்திரனுக்கு இவனிடம் இருக்கும் தண்டனைகளை பரீட்சித்துப் பார்ப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. அவசர அவசரமாக சொன்னான். “சத்தியமாய் சொல்கிறேன் என்னை நம்பு. நான் நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் என்னை நம்பியவர்களுக்கும், எனக்குப் பிடித்தவர்களுக்கும் நான் இது வரையில் துரோகம் செய்ததில்லை. ஆச்சார்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும். வயதானவராக இருந்தாலும் அவருடன் பழகும் போது அவரை என் நண்பராகத் தான் நினைத்தேன். ... Read More »

அமானுஷ்யன் – 83

ராஜாராம் ரெட்டிக்கு மந்திரி போன் செய்தார். “நீங்கள் கேட்டதை நான் அனுப்பி இருந்தேன். கிடைத்ததா?” “கிடைத்தது” “ஜெயினைப் பார்க்க எப்போது கிளம்புகிறீர்கள்” “இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்புவேன். நான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவரைப் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரே போன் செய்தார், என்னிடம் பேச வேண்டும் என்று. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று….” “அவர் என்ன பேச வேண்டும் என்று கூப்பிட்டார்?” “தெரியவில்லை. போய்தான் பார்க்க ... Read More »

அமானுஷ்யன் – 82

கடுமையான வலியை சிறிது நேரமே அனுபவித்திருந்தாலும் மகேந்திரன் முகத்தில் பிரேத களை பரவியிருந்தது. மறுபடியும் வலி போய் விட்டது என்பதை நம்ப முடியாதவனாக அவன் தலையை ஒரு முறை அசைத்துப் பார்த்தான். பின் தன் கழுத்தைத் தடவிய படி அக்‌ஷயைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே கேட்டான். “நீ… நீங்கள் தான் ஆச்சார்யாவின் ஹீரோவா?” அக்‌ஷய் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “உனக்கு என்னைத் தெரியாதா?” “ஆச்சார்யா உங்களைப் பற்றி சொல்லித் தான் தெரியும்” “என்ன சொன்னார்?” “வாயு ... Read More »

அமானுஷ்யன் – 81

மந்திரிக்கும் சிபிஐ மனிதனுக்கும் இடையே ஆன அந்த சந்திப்பு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மந்திரியின் வீட்டில் நடந்தது. மந்திரி என்றும் இது போன்ற சந்திப்புகளைத் தன் வீட்டில் அனுமதிப்பதில்லை என்றாலும் முதல் முறையாக விதி விலக்கை அனுமதிக்கக் காரணம் அமானுஷ்யனுடன் போனில் நடத்திய பேச்சு வார்த்தையே. இது போன்ற பேச்சு வார்த்தைகளை அமானுஷ்யன் விவகாரத்தில் நடத்தியது பெரும்பாலும் சிபிஐ மனிதனே என்றாலும் ஆனந்திடம் பேசும் போது தன் குரல் தன்னை அடையாளம் காட்டி விடும் என்ற காரணத்தால் ... Read More »

அமானுஷ்யன் – 80

ஆனந்த் தன்னை சுதாரித்துக் கொண்டு “ஹலோ” என்றான். மறுமுனையில் இருந்து அலட்டிக் கொள்ளாத ஒரு அமைதியான குரல் கேட்டது. “ஹலோ மிஸ்டர் ஆனந்த்” ஆனந்திற்கு செல் போனை எடுத்துக் கொடுத்த போதே அக்‌ஷய் செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்திருந்ததால் மறுபக்க பேச்சை அக்‌ஷயும் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனந்த் பரபரப்போடு சொன்னான். “ஆமாம். நீங்கள் யார் பேசுகிறீர்கள்?” “எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.” “எக்ஸா. இது என்ன பெயர்?” “பெயரில் என்ன இருக்கிறது ஆனந்த். ஒரு அடையாளத்திற்காக ... Read More »

அமானுஷ்யன் – 79

மந்திரி செல் போனைக் கீழே வைத்து விட்டு ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு கேசவதாஸைப் பற்றி நன்றாகத் தெரியும். அந்த ஆள் அவ்வளவு சுலபமாக பயப்படக் கூடிய ஆள் அல்ல. அப்படிப் பட்ட ஆளே பயந்து போயிருக்கிறான் என்றால் அது அந்த சைத்தானின் சாதனை என்றே சொல்ல வேண்டும். அந்த குறுந்தாடி சைத்தான் என்று அடிக்கடி அழைத்து இப்போது அவருக்கும் அப்படியே அமானுஷ்யனை அழைக்கத் தோன்றுகிறது. அந்தப் பெயருக்கு அவன் பொருத்தமானவன் தான்….. “சார். அவன் வந்து ... Read More »

அமானுஷ்யன் – 78

கேசவதாஸ் அக்‌ஷயை சுட்டுத் தள்ளுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்த போது அவரை அறியாமல் அவர் பார்வை துப்பாக்கிக்கு மேல் இருந்த போர்வைக்குப் போக அவர் மேல் வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அக்‌ஷய் அமைதியாக சொன்னான். “அந்தப் போர்வைக்கு கீழே வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து கீழே என் பக்கம் வீசுங்கள்”. கேசவதாஸ் திகைத்துப் போனார். துப்பாக்கியை எடுத்து வீசுவதற்குப் பதிலாக சுட்டு விட்டால் தான் என்ன என்ற எண்ணம் அவருக்கு மறுபடி வந்தது. ஒன்றும் ... Read More »

அமானுஷ்யன் – 77

கேசவதாஸ் வீட்டிற்குக் காவல் இருந்த நான்கு போலீஸ்காரர்கள் அன்றிரவும் யாரும் வருவார்கள் என்று நம்பவில்லை. சில நாட்களுக்கு முன் அப்படி ஒரு ஆள் வரக்கூடும் என்று தகவல் வந்துள்ளது என்று கூறி அவர்களைத் தருவித்த போது இருந்த சுறுசுறுப்பு இப்போது அவர்களிடம் இருக்கவில்லை. டிஐஜி கேசவதாஸ் அரசியல்வாதி அல்ல. அதே போல் அனாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ளும் ரகமும் அல்ல. அப்படிப்பட்டவருக்கு யாரிடமிருந்தாவது ஆபத்து வரக் காரணம் வேறெதுவும் கூட இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. மேலும் வரக்கூடிய ... Read More »

அமானுஷ்யன் – 76

மந்திரி சந்தேகத்துடன் கேட்டார். “அன்றைக்கே அவன் கேசவதாஸைப் போய் பார்ப்பான் என்றீர்கள். ஆனால் அவன் போகவில்லை. இப்போது மட்டும் அவன் அங்கே போவான் என்று என்ன நிச்சயம்?” “அப்போது நாம் அவருக்கு பாதுகாப்பை அதிகப் படுத்தி இருந்தோம். அதைப் பார்த்து தானோ இல்லை வேறெதாவது காரணத்தாலோ அவன் போகவில்லை. ஆனால் இப்போது அவன் கண்டிப்பாக அவரைப் போய்ப் பார்ப்பான் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது” “அந்த ஆள் முதலிலேயே அந்த அளவு பாதுகாப்பு தருவதை ரசிக்கவில்லை. அந்த ... Read More »

Scroll To Top