அக்ஷய் அந்த மீசைக்காரரின் சந்தேகத்தைக் கவனித்தாலும் அலட்டிக் கொள்ளவில்லை. சஹானாவிடம் சொன்னான். ”சஹானா. நான் அவனைப் பற்றி சந்தேகப்பட்டது எல்லாம் உண்மையாகி விட்டது பார்த்தீர்களா. இனியாவது வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடாதீர்கள்” சஹானா ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். ஆரம்பத்தில் இருந்து அலட்டாமல், பதறாமல் சற்று சோம்பலாக சோபாவில் சாய்ந்து கொண்டு பேச அவனால் எப்படி முடிகிறது என்று அவள் திகைத்தாள். ”சஹானா. உங்கள் டிவி ரேட்டிங் உடனடியாக ஒரு வழி சொல்கிறேன் கேளுங்கள். அந்தத் ... Read More »
Daily Archives: January 22, 2015
அமானுஷ்யன் – 34
January 22, 2015
அக்ஷய் கதவைத் திறந்த போது வெளியே அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் நின்றிருந்தார்கள். இரண்டு பேரும் கிட்டத்தட்ட 25 முதல் 50 வயதுடையவர்களாக இருந்தார்கள். ஒருவர் பாதி வழுக்கைத் தலையுடன் பருமனாக இருந்தார். மற்றவர் ஒடிசலாக பெரிய மீசை உடையவராக இருந்தார். “போலீஸ்” என்று வழுக்கைத் தலையுடையவர் தன் அடையாள அட்டையைக் காட்டினார். வாசலில் இருந்து வழி விடாமல் அமைதியாக அந்த அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பின்தான் அக்ஷய் அவர்களை உள்ளே விட்டான். “உள்ளே வாங்க ... Read More »
அமானுஷ்யன் – 33
January 22, 2015
ஆனந்த் பெங்களூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் லலிதாவின் போன் நம்பரையும், அக்ஷய் அவளுக்குப் போன் செய்த நேரத்தையும் சொல்லி அந்த போன் எங்கிருந்து வந்தது என்று கேட்டிருந்தான். சிறிது நேரத்தில் அந்த போன் நம்பரை அவர்கள் சொன்னார்கள். டில்லி டெலிபோன்ஸில் அந்த போன் நம்பரைக் கொடுத்து விசாரித்ததில் அது ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தினுடையது என்பது தெரிந்தது. அங்கும் சென்று விசாரித்தான். அந்த பப்ளிக் பூத் காரனுக்கு அந்த நேரத்தில் போன் செய்தவனுடைய எந்த அங்க அடையாளமும் நினைவு ... Read More »
அமானுஷ்யன் – 32
January 22, 2015
ராஜாராம் ரெட்டிக்கு ஆரம்பத்தில் இருந்தே மகேந்திரனைப் பிடித்ததில்லை. எப்போதுமே அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது, அவனுடைய பொழுது போக்காக இருந்ததுதான் காரணம். கம்ப்யூட்டரில் அவனுக்கு இருந்த அசாத்திய அறிவு ஆபிசில் பலரையும் அவன் உதவியை நாட வைத்தது என்றாலும் ராஜாராம் ரெட்டி அவனை எதற்கும் அண்டியதில்லை. அவருக்குத் தெரிந்து அவனிடம் அதிகமாய் நட்பு பாராட்டாத இன்னொரு நபர் டைரக்டர் மஹாவீர் ஜெயின். அரசியல் சிபாரிசில் வந்தவன் என்பதால் அவர் அவனிடம் அவசியமானதற்கு மட்டும் பேச்சு வார்த்தை வைத்திருந்தார். ... Read More »
அமானுஷ்யன் – 31
January 22, 2015
ப்யாரிலால் களைத்துப் போய் வீட்டுக்கு வந்தான். அவன் வீட்டைத் தூரத்தில் இருந்தே சாதாரண உடையில் கண்காணித்துக் கொண்டிருந்த இரண்டு ரகசியப் போலீசாரை அவனால் அறிய முடிந்தது. ஆட்கள் மாறினாலும் காவல் மாறவில்லை. அந்த பாழாய்ப் போன தீவிரவாதி(?) கண்டிப்பாக அவனிடம் வருவான் என்று அவனுடைய மேலதிகாரிகள் நினைப்பது எதனால் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. உள்ளே நுழைந்து அவன் விளக்கைப் போட்டுத் திரும்பிய போது அவனுக்கு ஒரு கணம் இரத்தம் உறைந்தது. அந்த சைத்தான் அங்கு ஒரு ... Read More »
அமானுஷ்யன் – 30
January 22, 2015
‘என்னை நல்லவன் என்பதை நான் எல்லாம் பேசி முடித்த பிறகு நீ சொல்வது தான் சரியாக இருக்கும்” என்றான் மது. ”நீ என்ன சொல்ல வருகிறாய் என்பது எனக்கு முதலிலேயே தெரியும்” என்று புன்னகையுடன் அக்ஷய் சொன்னான். ”சொல் பார்க்கலாம்” ”சஹானா ஆரம்பத்தில் இருந்தே நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நீயும் கஷ்டம் தருபவனாக இருந்து விடாதே. உன்னை முதலிலேயே போலீஸ் தேடுகிறது. நீ இங்கே இருப்பது தெரிந்தால் அவளுக்கு ஆபத்து. அதனால் சீக்கிரம் அவள் வீட்டை விட்டுப் ... Read More »
அமானுஷ்யன் – 29
January 22, 2015
ப்யாரிலால் போய்ச் சரியாக பதினேழு நிமிடங்கள் கழிந்து, வெளியே யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சிபிஐ மனிதனும், அந்த மந்திரியும் அந்தக் குடோனிலிருந்து கிளம்பினார்கள். ”நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” காரில் செல்லும் போது மந்திரி சிபிஐ மனிதனைக் கேட்டார். ப்யாரிலால் கிளம்பிய பிறகு ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சிபிஐ மனிதன் ஒன்றும் பேசாமல் இருந்தது அவருக்கு என்னவோ போல் இருந்தது. தனக்கே இன்னும் புரியாத புதிய பிரச்னை ஏதோ இருந்து அவன் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது ... Read More »
அமானுஷ்யன் – 28
January 22, 2015
”உடம்பு சரியில்லையா?” ஜெயின் ஆனந்திடம் கவலையுடன் கேட்டார். அவனுடைய ஷேவ் செய்யாத வாடிய முகம் அப்படி அவரைக் கேட்க வைத்தது. ”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்றான் ஆனந்த். ஆனால் ஹரித்வாரில் அந்தச் சாது சொன்னதைக் கேட்டதில் இருந்து அவன் இப்படித்தான் இருந்தான். அந்தச் சாது எதிர்காலத்தைப் பற்றிய எல்லாத் தகவலும் முன்பே தெரிவது நல்லதல்ல என்று சொல்லியும் வற்புறுத்திக் கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல் அவனை நிறையவே பாதித்து விட்டது. சிறு வயதிலிருந்தே தாயின் பக்தியையும், விரதங்களையும் பார்த்துச் ... Read More »
அமானுஷ்யன் – 27
January 22, 2015
மது சஹானா வீட்டில் நுழைந்த போது ஹாலில் அந்தப் புதிய மனிதன் இருக்கவில்லை. ”எங்கே அந்த ஆள்?” என்று சைகையால் அவன் சஹானாவிடம் கேட்டான். சஹானா அக்ஷய் இருந்த அறையைக் காட்டினாள். ”வருண் எங்கே?” ”அவன் நண்பனின் பிறந்த நாள் என்று போயிருக்கிறான். இல்லாவிட்டால் எந்நேரமும் அக்ஷய் கூடத்தான் இருப்பான்.” மரகதம் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு மறுபடித் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். சஹானாவின் திருமணத்திற்குப் பிறகு அவன் பல முறை அந்த வீட்டுக்கு வந்திருக்கிறான். ... Read More »
அமானுஷ்யன் – 26
January 22, 2015
அந்தச் செய்தித்தாளில் பார்த்த புகைப்படம் அக்ஷயிற்கு நல்ல பரிச்சயமான முகம். ஆனால் அந்தப் புகைப்படம் அவனுக்கு வேறெந்த நினைவையும் ஏற்படுத்தவில்லை. அந்தப் புகைப்படத்துடன் வந்த செய்தியை அவன் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தான். அந்த மனிதர் பெயர் ஆச்சார்யா என்றும், அவர் சிபிஐயின் அடிஷனல் டைரக்டர் என்றும் அவர் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டதாகவும் அவரைக் கொன்ற கொலையாளியிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் எழுதியிருந்தது. அவரைக் கொன்ற தேதிக்கு மறுநாள் தான் அவனையும் யாரோ கொல்ல முயற்சி ... Read More »