ஆர்டிஓ அலுவலகத்துக்குள் புகுந்த கார்
கடந்த 2010ம் ஆண்டு வாஷிங்டனி நகரின் ஸ்போக்கன் வாலி என்ற இடத்திலுள்ள ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்தவர் தனது காரை அந்த அலுவலகத்தில் பார்க்கிங் பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது கால் தவறி பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை கொடுத்ததில் அந்த கார் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகத்துக்கு சீறிப்பாய்ந்தது. மேலும், அந்த காரை ஓட்டிவந்தவர் காரிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பிவிட்டார். போலீசாரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து அலுவலகத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த அலுவலகம் அன்றைய தினம் மூடப்பட்டது.
கடந்த ஆண்டு லிங்கன் பகுதியிலுள்ள பிரபல பீட்சா கடை வாசலில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் தனது ஹோண்டா ஃபிட்(ஜாஸ்)காருக்குள் அமர்ந்தபடி பீட்சா ஆர்டர் செய்துள்ளார். பீட்சா வருவதற்குள் கால் ஆக்சிலேட்டர் பெடல் பகுதியில் சிக்கியது. இதனால், கார் முறுக்கிக் கொண்டு பீட்சா கடையின் வாயில் வழியாக கச்சிதமாக உள்ளே சீறிப் புகுந்ததுவிட்டது. காருக்குள் அதிர்ச்சியில் இருந்த கார் ஓட்டுனரை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்தால் தப்பிய உயிர்
விபத்தால் உயிர்கள் பறிபோவது வழக்கம். ஆனால், இங்கு விபத்தால் உயிர் பிழைந்த டிரக் டிரைவரை பற்றி படிக்க போகிறோம். 2011ம் ஆண்டு அமெரிக்காவில் பேலர் என்ற 55வயது டிரக் டிரைவர் ஒருவர் நெடுஞ்சாலை ஒன்றில் டிரெய்லர் ஒன்றை ஓட்டிச்சென்றார். அப்போது, ஆப்பிள் ஒன்றை கடித்து விழுங்க முயன்றுள்ளார். அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி மயங்கியுள்ளார். அடுத்த வினாடி சாலையின் நடுவில் இருந்த கான்கிரீட் தடுப்பில் டிரெய்லர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த வேகத்தில் பேலர் தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டும் வெளியே வந்து விழுந்துவிட்டது. உடனடியாக, அவர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலம் பெற்றார். இந்த விபத்தால் அந்த நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. கான்கிரீட் தடுப்பில் மோதியதால்தான் பேலரின் தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டு வெளியே வந்து அவர் உயிர் பிழைத்தார். இதனை போலீசாரும் விசாரணை மூலம் உறுதிப்படுத்தினர்.
போலீஸ் நிலையத்தின் மீது மோதிய திருட்டு வாகனம்
கடந்த 2012ம் ஆண்டு அமந்தா ஜெஃப்ரிஸ் என்ற 27வயது பெண் ஒரு பிக்கப் டிரக்கை திருடிக் கொண்டு பறந்தார். விபரமறிந்த போலீசார் அவரை பிடிக்க துரத்திச் சென்றனர். அப்போது அந்த பிக்கப் டிரக்கை அருகிலிருந்த போலீஸ் நிலையத்தில் மோதி மாட்டிக் கொண்டார்.
இவருக்கு நேர்ந்த விபத்து
உட்டா சால்க் லேக் சிட்டியை சேர்ந்த லீ ரெட்மான்ட் என்பவர் அதிக நீளம் கொண்ட விரல் நகங்களை கொண்டதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். இவருக்கு 28 அடி நீள நகம் இருந்தது. கடந்த 1979ம் ஆண்டு முதல் விரல் நகத்தை வெட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், 2009ம் ஆண்டு நடந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அப்போது அவரது நகங்கள் கடுமையாக சேதமடைந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறி வீடு திரும்பிய லீ மான்ட் அதன்பிறகு நகம் வளர்ப்பதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார்.