தனது நான்கு வயது மகனின் உடலில் 30 வருடங்களுக்கு முன் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையை சேர்ந்தவரின் ஆவி இருப்பதாக தாய் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
விர்ஜினியாவைச் சேர்ந்த மிச்செல் லூகாஸ் என்ற பெண்மணி தனது நான்கு வயது மகன் ஆண்ட்ரூ உடம்பில் 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் போரில் இறந்த லூயிஸ் என்பவரது ஆவி புகுந்துள்ளதாக கருதுகிறார். இதுபற்றி மிச்செல் கூறுகையில், ஆண்ட்ரூ போரில் இறந்த லூயிஸ் பற்றியும், அவர் இறந்த முறையையும் நினைவுகூர்கிறான் என்றும் லூயிஸுடன் இறந்த மற்ற வீரர்களின் புகைப்படங்களையும் அவன் சரியாக அடையாளம் காண்கிறான் எனவும் தெரிவித்துள்ளார்.