வழமைக்கு மாறான சில மனித பிறவிகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இரட்டை தலை குழந்தை உதாரணமாக சொல்லலாம். இதே போன்று அங்காங்கே விலங்குகளும் வினோதமான பிறவிகள் எடுக்கின்றன. பல கால்களுடனும் தலைகளுடனும் கண்களுடனும் பிறக்கின்றன. இப்படி ஒரு சம்பவம் தான் இன்று நீங்கள் பார்க்கப்போவது. ஆம் மூன்று தலைகள் கொண்ட தவளை பற்றியதே இது. ஆடு – மாடு என மற்றைய விலங்குகள் இப்படி பிறப்பது சாதாரணமாக ஒரு விடயமாகி விட்டது. ஆனால் ஒரு தவளை மூன்று தலைகளுடன் பிறப்பது மிகவும் அரிதான ஒரு விடயம்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. மூன்று தலைகளுடன் துள்ளித்திரியும் அந்த தவளைக்கு அப்போது ஆறு கால்கள்.. ஆனால் இன்று அந்த தவளை உயிருடன் இருக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. இது தொடர்பான காணொளி உங்களுக்காக… –