பிரேசில் நாட்டில் உள்ள ஒருவர் டாக்டர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர் 12 மணி நேரம் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள Salvador என்ற பகுதியை சேர்ந்த Valdelucio Goncalves என்ற 54வயது நபர் பல்வேறு உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளித்த சிகிச்சையின் பலனின்று அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
இதனால் அவருடைய உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். சரியாக 12 மணிநேரம் கழித்து Valdelucio Goncalves அவர்களுடைய உடலை மார்ச்சுவரில் இருந்து எடுத்துக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய அவருடைய சகோதரர் முனைந்தபோது, இறந்த Valdelucio Goncalves அவர்களின் உடலில் அசைவு தெரிவதை கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனையில் இருந்த நர்ஸ் மற்றும் டாக்டர்களை அணுகினார். பயங்கர அதிர்ச்சியுடன் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் Valdelucio Goncalves கண்விழித்தார்.
இதனால் அவருடைய உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மரணத்தில் இருந்து மீண்டாலும் அவரால் பேசமுடியவில்லை. அவர் தனக்கு ஒரு பேப்பரும் பேனாவையும் கேட்டு வாங்கி தான் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த அனுபவங்களை எழுதி தன் உறவினர்களுக்கு காட்டினார். இதை பார்த்த அவருடைய உறவினர்களும், மருத்துவர்களும் ஆச்சரியத்தின் உச்சத்தை அடைந்தனர். –