காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை மரமொன்றை பிரான்ஸைச் சேர்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். மேற்படி மரத்தின் பிளாஸ்டிக்காலான இலைக் கட்டமைப்பில் மறைந்துள்ள காற்றாடிகள் மூலம் மின்சக்தி பிறப்பிக்கப்படுகிறது. இந்த காற்று மரத்தை எதிர்வரும் ஆண்டு சந்தைப் படுத்த அதனை உருவாக்கியுள்ள ஜேரோமி லரிவியரி தலைமையிலான ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதன் விலை 23 500 ஸ்ரேலிங் பவுண் என தெரிவிக்கப்படுகிறது.