இங்கிலாந்து அருகே ஹோட்டல் ஒன்றில் பெண்ணின் முகத்தை கடித்து மென்று கொண்டிருந்தபோது ஒருவர் பாதுகாவலர்களிடம் கையும், களவுமாக சிக்கினார். சவுத் வேல்ஸில் உள்ள சிர்ஹோவி ஆர்ம்ஸ் ஹோட்டலில் மேத்யூ வில்லியம்ஸ்(34) என்பவர் தங்கி இருந்தார். தனது வீட்டுக்கு அருகே வசித்த நபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு தற்போது தான் வெளியே வந்தார்.
அவர் அந்த ஹோட்டலின் அறையில் வைத்து 22 வயது பெண்ணை தாக்கி அவரின் கண் விழிகளை நோண்டி எடுத்து சாப்பிட்டுள்ளார். மேலும் அவரின் முகத்தை கடித்து மென்று தின்று கொண்டிருந்தார். அப்போது ஹோட்டல் பாதுகாவலர்கள் அவரின் அறைக்குள் நுழைந்த போது அவர் பெண்ணின் மாமிசத்தை சாப்பிடுவதை பார்த்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். –