பிரித்தானியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் வயிற்றில் பாதுகாக்கப்பட்ட மண்டை ஓட்டினால் உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் சவுத்ஹாம்டனை(Southhampton) சேர்ந்த ஜாஹ்ஃபரி மார்ட்டின்(Jahfari Martin Age-9) என்ற சிறுவன் பைக்கில் சென்றபோது காரில் மோதி விபத்துக்குள்ளானது, இதில் அவரது மண்டை ஓடு பலமான காயமடைந்தது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது மூளை வீங்கி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வீக்கம் அவனுக்கு அழுத்தத்தை தந்து உயிரை கொல்லும் என்ற அபாயம் இருந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளிக்க முடிவு எடுத்துள்ளனர்.
எனவே அவர்கள், மார்ட்டினின் அழுத்தத்தை குறைக்க, கண் வரிக்கு மேலே நெற்றியில் இருக்கும் தோலை நீக்கி, கையை விட பெரிய அளவிலான ஒரு மண்டை பகுதியை வெட்டி எடுத்துள்ளனர். மண்டை ஓட்டை நீக்கிய பின்னர் அவரது வயிற்றில் பைகளை உருவாக்கி, அதில் எலும்பு துண்டுகளை வைத்து, சுமார் 18 நாட்களுக்கு பாதுகாத்து வந்துள்ளனர்.
இதன்பின் அவருக்கு அழுத்தம் குறைந்த பிறகு மீண்டும் அந்த மண்டை ஓட்டினை வயிற்றில் இருந்து எடுத்து மண்டையில் பொருத்தியுள்ளனர். இந்த அசாதாரண செயல்முறையை bi-frontal decompressive craniectomy என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அறுவை சிகிச்சை முறையில் குணமடைந்த மார்டின், மூன்று நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்