Home » பொது » கொடிய பாம்புகளை கொண்ட “பாம்பு தீவு”: மிரளவைக்கும் புகைப்படங்கள்

கொடிய பாம்புகளை கொண்ட “பாம்பு தீவு”: மிரளவைக்கும் புகைப்படங்கள்

பிரேசில் நாட்டின் தீவு ஒன்றில் உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசின் கடற்பரப்பில் இருக்கும் இல்டா குயிமடா கிராண்டே (Ilha da Queimada Grande) என்ற தீவில், உலகில் உள்ள அனைத்து வகை கொடிய விஷ பாம்புகளும் வசிக்கின்றன.

குறிப்பாக மிகக் கொடிய விஷம் கொண்ட கோல்டன் லான்ஸ்ஹெட் (Golden Lancehead) என்ற பாம்புகள் மட்டுமே இங்கு அதிகளவில் உள்ளதாகவும், இவை 1 முதல் 3 சதுர மீற்றர் நீளத்தை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு பாம்புகளை அகற்றிட்டு மக்களைக் குடியமர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக பிரேசில் அரசு முயற்சித்துள்ளது.

ஆனால் மனித வாடையை உடனே உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தியை இந்த பாம்புகள் கொண்டுள்ளதால், அரசின் முயற்சி கைவிடப்பட்டது. நாளடைவில் பாம்பு தீவு என அழைப்பட்ட இத்தீவில், ஆராய்ச்சியாளர்கள் மட்டும் செல்ல சில நேரங்களில் பிரேசில் அரசு அனுமதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top