2038 ஆம் ஆண்டில் உலகிலுள்ள பெரும்பலான கணினிகள் செயலிழந்துவிடக்கூடிய அபாயமிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கணினி நேரத்தை கணக்கிடும் முறையிலுள்ள தொழில்நுட்ப ரீதியான குறைபாடொன்றே இதற்குக் காரணம்.
இதன்படி, இன்னும் 24 வருடங்களில் அதாவது 1938 ஜனவரி 19 ஆம் திகதி கிறீன்விச் நேரப்படி அதிகாலை 3 மணி 14 நிமிடம் 7 வினாடி எனும் நேரத்தை அடையும்போது கணினிகளால் நேரத்தை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் எனக் கூறப்பட Year 2038 Problem (2038 ஆம் வருட பிரச்சினை) என இக்கோளாறு குறிப்பிடப்படுகிறது.]
தற்போது உலகின் பெரும்பாலான கணினிகளின் ஒப்பரேட்டிங் சிஸ்டம்கள் 32 பைட் சிஸ்டம் முறைமையிலேயே இயங்குகின்றன. 32 பைட் இன்டெஜர் முறையில் அதிபட்சமாக 2,147,483,647 விநாடிகளையே கணக்கிட முடியும். இத்தகைய 32 பைட் இசிஸ்டம் கணினிச் செயன்முறைகளில் ஆரம்ப நேரமானது 1970 ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை 00.00 மணியாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2038 ஜனவரி 19 ஆம் திகதி அதிகாலை 3.14 மணியாகும்போது 1970 ஜனவரி முதலாம் திகதியிலிருந்தான 2,147,483,647 விநாடி நேரம் கடந்துவிடும். அதன்பின் நேரத்தை சரியாக கணக்கிட முடியாமல் 32 பைட் சிஸ்டம் கணினிகள் செயலிழக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் 64 பைட் சிஸ்டம் முறைமைக்கு கணினிகளின் மென்பொருட்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே யூ ரியூப் இணையத்தளம் இத்தகைய நெருக்கடியொன்றை எதிர்கொண்டிருந்தது. யூ ரியூபில் எண்ணிக்கையை கணக்கிடும் முறைமையான 32 பைட் சிஸ்டம் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தால் அததிகபட்சமாக 2,147,483,647 இலக்கம்வரையே அது கணக்கிடக்கூடியதாக இருந்தது. ஆனால் தென் கொரிய பாடகர் ஷையின் கங்ணம் ஸ்டைல் பாடல் யூரியூப் இணையத்தளத்தில் பார்க்கப்பட்ட தடவைகள் மேற்படி எண்ணிக்கையை கடந்து சென்றது.
யூ ரியூப் இணையத்தளத்தில் வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைமையான 64 பைட் முறைமைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.