Home » பொது » உலகின் வியப்பூட்டும் வினோத சட்டங்கள் – அவசியம் அறிக –

உலகின் வியப்பூட்டும் வினோத சட்டங்கள் – அவசியம் அறிக –

உலகின் பல்வேறு நாடுகளில் வியப்பூட்டும் பல வித்தியாசமான சட்டங்கள் அமுலில் உள்ளன.

அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ மற்றும் இத்தாலியில் புறாக்களுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • கனடாவில் 10 டொலருக்கு அதிகமாக பொருள் வாங்கிவிட்டு, சில்லறையாக பணத்தினை செலுத்துவதற்கு தடையுள்ளது.

  • ரஷ்யாவின் மாஸ்கோவில், பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனமான கார் போன்றவற்றை சுத்தமாக வைக்காவிட்டால் பொலிசாரால் அபராதம் விதிக்கப்படும்.

  • சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்ல தடை உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சுவிங்கம் மெல்ல அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்காவின் வாஷிங்கடனில் நோயை வெளிக்காட்டக் கூடாது. நோயுடன் வெளியே வந்தால் அபராதம் முதல் சிறைத் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

  • ஜப்பான் நாட்டில் மக்கள் குண்டாக இருக்க கூடாது என்ற விந்தையான சட்டம் உள்ளது.

  • டென்மார்க் ஹொட்டல்களில் சாப்பிடும் மக்கள், தங்கள் வயிறு நிறையவில்லை என்று கருதினால் சாப்பாட்டிற்கு பணம் செலுத்த தேவையில்லை.

  • டென்மார்க்கில் பகலில் சாலையில் சென்றாலும் வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டு தான் செல்லவேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

  • அமெரிக்காவின் கலரோடாவில் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் மழை நீரை சேமிப்பது தண்டனைக்குரிய செயலாக கருதப்படுகிறது.

  • ஜேர்மனியின் நகரம் ஒன்றில், வாகனத்தின் எரிபொருள் பாதியில் தீர்ந்து சாலையில் வாகனம் நின்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

  • அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் வீட்டில் பழுதடைந்த மின்சார பல்பை மாற்றுவதற்கு கூட சான்று பெற்ற எலக்ட்ரீசியன் வரவேண்டும்.

– See more at: http://seithyulagam.com/fullview-post-848-cat-22.html#sthash.wvN0udAJ.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top