Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » இனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்…

இனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்…

சிக்ரெட்(cicret) என்னும் பாரீஸ் நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய பிரேஸ்லெட்டை அறிமுகப்படுத்தியது. பிரேஸ்லெட் என்றதும் தங்கமா இல்ல பிளாட்டினமா என்று தான் சந்தேகம் வரும். இரண்டும் அல்ல.
brimgres

இது எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்! ஆம், இந்தப் பிரேஸ்லெட் அணிந்து கொள்வதன் மூலம் உங்கள் கையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம். இந்தப் பிரேஸ்லெட்டை உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டுடன் இணைப்பதன் மூலம் உங்கள் கையிலுள்ள இந்தப் பிரேஸ்லெட் மொபைல் மற்றும் டேப்லெட்டின் திரையை ப்ரொஜெக்டர் மூலம் உங்கள் கையில் ப்ரொஜெக்ட் செய்து காண்பிக்கிறது.

இதன் மூலமாக மெயில் செக் பண்ணலாம், கேம்ஸ் விளையாடலாம், அழைப்பை ஏற்கலாம், புத்தகம் படிக்கலாம். நோட்டிபிக்கேஷன் வந்தால் வைபிரேட் ஆகும். LED லைட் மூலமும் தெரியப்படுத்தும்.

வை-பை, ப்ளூடூத், மினி யூஎஸ்பி தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகயிருக்கும் இந்தப் பிரேஸ்லெட்டின் புரோமோ வீடியோ யூடியூப்பில் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்த வீடியோவை 43 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
இந்த வருடம் ஜூன் மாதம் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 16ஜிபி நினைவகத்துடனும், 32 ஜிபி நினைவகத்துடனும் வெளிவருகிறது. இதன் விலை $400 அமெரிக்க டாலர்களாம் (அடேங்கப்பா இதுக்கு ஒரு பவுன் தங்கத்துல பிரேஸ்லெட்டை செஞ்சு மாட்டிகலாம்!).

இந்திய மதிப்பில் சராசரியாக 25ஆயிரம் ரூபாய்! இந்தப் பிரேஸ்லெட்டின் மாதிரி வடிவம் மற்றும் செயல்பாடு எப்படி இருக்கும் என அனைவருக்கும் ஆர்வமாக இருக்கிறதல்லவா? பிரேஸ்லெட்டின் மாதிரி இயக்க வீடியோவை பார்க்க யூடியூப் லிங்க்: http://bit.ly/13lNNMo http://youtu.be/2vxSu3UwMks – See more at: http://seithyulagam.com/fullview-post-1188-cat-15.html#sthash.UD3rgja9.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top