Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » டைனோசரை வேட்டையாடிய அனகோண்டா !

டைனோசரை வேட்டையாடிய அனகோண்டா !

அனகோண்டா பாம்புகளும், டைனோசர்களும் பிரம்மாண்ட தோற்றம் உடையவை. டைனோசர்கள் மற்ற எல்லா உயிரினங்களையும் வேட்டையாடும் திறன் உடையவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் அனகோண்டா பாம்புகள், குட்டி டைனோசர்களையே வேட்டையாடி உள்ளன என்று இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் தனஞ்ஜெய் மொகாபே, 1980 முதல் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு புதை படிவங்களை சேகரித்து ஆய்வு செய்து வந்தார். இவருக்கு 1987-ம் ஆண்டு ஒரு மர்மமான புதைபடிமம் கிடைத்தது. முட்டை ஓடுகளும், சில எலும்புத் துண்டுகளுமாக அந்த படிமம் இருந்தது. நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு அதன் மர்மங்கள் சற்று விலகியது. 2001-ம் ஆண்டில் அயல்நாட்டு விஞ்ஞானிகள் இதைப் பார்வையிட்டு சில முடிவுகளை தெரிவித்து சென்றனர். மேற்கு இந்தியப் பகுதியான குஜராத் மாநிலத்தில் கிடைத்த இந்த புதைபடிமத்தின் மர்மம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகியது.

eggs

அதாவது அந்த புதைபடிமம் அனகோண்டா பாம்பால் வேட்டையாடப்பட்ட டைனோசர் குட்டி என்று தெளிவாகி இருக்கிறது. அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக நிபுணர் குழு ஒன்று, இந்தியா வந்து சில புள்ளி விவரங்களை சேகரித்தது. அப்போது இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இது நமக்கு கிடைத்த மிக அரிய புதைபடிவம் என்று தொல்லியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆய்வில் தெரியவந்த சில சுவாரசியமான தகவல்கள் வருமாறு:- டைனோசர் குட்டிகளை வேட்டையாடும் இந்த பாம்பு இனத்துக்கு சனாஜே இன்டிகஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இவை சாரோபாட் இன டைனோசர் குட்டிகளை வேட்டையாடி உணவாக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக முட்டையில் இருந்து வெளிவரும் டைனோசர் குட்டிகளை பிடித்து தின்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி இருக்கின்றன. இதற்காக சில நேரங்களில் டைனோசர் முட்டை களையே கடத்தி விடுகின்றன இந்த பாம்பு இனங்கள்.
anaconda_200_200

மேலும் டைனோசர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள குகைகளில் அல்லது நீர்நிலைகளில் இந்த பாம்புகள் பதுங்கி வாழ்ந்திருக்கின்றன. அரை மீட்டர் வளர்ச்சி உள்ள டைனோசர் குட்டிகளைக்கூட, பாம்புகள் தமது வலிமையால் சுற்றி வளைத்து வேட்டையாடி உள்ளன. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த புதைபடிமம் சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top