Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » பூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?

பூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது ரேடியோ அலை மூலம் வினோதமான மற்றும் புதுவிதமான ஒலி மற்றும் ஒளியை வானில் ஏற்படுத்துவதன் மூலம் புதிய யுத்தியை கண்டறிந்துள்ளார்கள். இதன் மூலம் ஒரு மணி நேரம், ஒரு நாள் மற்றும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பூகம்பம் ஏற்படுவதை அறிவிக்க முடியும். ஆனால் சமீபத்தில்தான் நிபுணர்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் முறையாக இந்தப் பேரழிவு முன்னறிவிப்பான்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

சில நேரங்களில் இந்த வானில் ஏற்படும் ஒளி பயங்கரமான பெரிய பூகம்பங்களைக் கூட முன்னறிவிப்பு செய்யும். உதாரணமாக 17 ஜனவரி, 1995ல் கூட ஜப்பானில் உள்ள கோபெ நகரத்தில் 8 கிலோமீட்டர் சுற்றளவில் பூமியிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற ஒளி உமிழப்பட்டது. அதன்பின் ஒருமணி நேரம் சென்றபின் 6.9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டு 5500 பேருக்கும் மேல் மாண்டனர். பூகம்ப ஆராய்ச்சியாளர்கள் இம்மாதிரியான பதிவுகளை ஜப்பானில் 1960லிருந்தும், கனடாவில் 1988லிருந்தும் பதிய தொடங்கியுள்ளனர்.

 

1

 

மற்றொரு முறையில் இவ்வாறு நேரிடக்கூடிய பூகம்பம் ரேடியோ அதிர்வலையில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் மூலம் ஒரு வாரத்திற்கு முன் சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகக் கூட எச்சரிக்கப்படுகிறது. கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் சான்பிரான் சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தை அது ஏற்படும் முன்பே இம்மாதிரியான சமிக்ஞைகள் மூலம் பதிந்துள்ளனர். டூங்குவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 63 பேர் இறந்தனர்.

பூகம்பம் ஏற்படுவதற்குமுன் பூமியில் உள்ள பாறைகளோ அல்லது தட்டுகளோ நகரும்போதோ அல்லது சிதையும்போதோ ஏற்படும் மின்காந்தத்தில் ஏற்படும் குழப்பத்தினால் ஒளி மற்றும் ரேடியோ அலை சமிக்ஞைகள் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

2

 

நாசா ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆராய்ச்சி மையத்தில் பாறை சிதைவுப்படுத்தும் பரிசோதனையை விளக்கினார். இச்சோதனையில் சிதைக்கப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட பாறையில் உள்ள தாதுப் பொருட்களின் ஆக்சிஜன் பிணைப்புக்கள் சிதைவதால் பாறையில் இடைவெளிகள், துளைகள் ஏற்படுகிறது. இதனால் பாறையிலிருந்து எலக்ட்ரான் அணுக்கள் ஏராளமாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேறும் எல்க்ட்ரான் அணுக்கள் பூமியின் வெப்பம் நிறைந்த அடுக்குகளை தாக்குகிறது. இதனால் அளவுக்கதிகமான மின்சாரம் வெளியாகிறது. ஆராய்ச்சி மையத்தில் நிகழ்த்தப்பட்ட இச்சோதனையில் நகரும் வேகம் ஒரு வினாடிக்கு 300 மீட்டர் இருந்தது.

மற்றொரு ஆராய்ச்சியில் நொறுங்கிய பாறைகளின் இடைவெளியில் ஏராளமான திரவ அணுக்கள் செல்வதால் பாறையில் ஸ்திரத்தன்மையை பாதிக்கிறது. மேலும் அதிகமான மின்சாரத்தால் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மின்சாரம் புவிப்பரப்பில் உள்ள ரேடியோ அலையில் மற்றும் மின்காந்தத்தில் குழப்பம் ஏற்படுகிறது. சாட்டிலைட் செயற்கைக்கோள்களின் உதவியுடன் நிபுணர்கள் மிகவும் குறைந்த அதிர்வலையை கண்காணிக்க முடியும். மேலும் புவியின் புறப்பரப்பில் துளைகளோ அல்லது வெடிப்புகளோ ஏற்படுவதால் எலக்ட்ரான் அணுக்கள் சேருவதால் அகச்சிவப்பு ஒளிக்கற்றைகள் மூலம் அங்கு பூகம்பத்திற்கான அறிகுறியை கண்காணிக்க முடிகிறது.

உலகில் பல விஞ்ஞானிகள் மேற்கண்ட முறைகளைதான் புவியின் மாற்றங்களை மற்றும் பூகம்ப முன்னறிவிப்புகளை துல்லியமாக அறிய பின்பற்றி வருகின்றனர். 2000ம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள பாலோ ஆல்டோ என்ற புவி ஆராய்ச்சி நிலையத்தில் திரு. டாம் பிளையர் என்பவர் தலைமையில் ஒரு குழு புவியின் காந்தப்புலத்தில் ஏற்படுகிற மாற்றங்களை அறிய வலையமைப்பு மூலம் நிலத்திலிருந்தே கண்காணிப்பதற்கு (Network of Ground&based stations) ஒரு நிலையம் நிறுவப்பட்டது.

3

 

இதுவரை இதன்மூலம் 60 பூகம்ப அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு பதியப்பட்டுள்ளன. பின் 2003ல் இதனுடன் ஸ்டான்போர்டு மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் என்ற மற்றொரு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து தொலைவில் கண்காணிக்கக்கூடிய ஒரு சாட்டிலைட் செயற்கை கோளை அனுப்ப கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது. இது மிகவும் பெரிய, துல்லியமாக பூமியில் ஏற்படுகிற மாற்றங்களை உணரக்கூடிய செயற்கை கோளாக இருக்கும். இன்னும் பத்தாண்டுகளில் இதனை செயல்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

1989ல் சான் பிரான்சிஸ்கோவுக்கு அருகில் லோமா ப்ரீட்டா என்ற இடத்தில் அங்கு 7.1 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதற்கு முன்பே அங்கு பலமான காந்தப்புல குழப்பம் பூகம்ப கண்காணிப்பு நிலையத்தின் மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்டது. 1999 செப்டம்பர் 21ல் தைவானிலுள்ள சிச்சி நகரில் 7.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்படுவதற்கு முன் இம்முறையின் மூலம் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது. தைவானில் மட்டும் ஆராய்ச்சியாளர்கள் 1997 லிலிருந்து 1999 வரை 144 பூகம்ப அறிகுறிகளை பதிந்துள்ளனர்.

1989ல் ஆர்மீனியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திகுப்பின் சோவியத்தின் காஸ்மாஸ் சாட்டிலைட் செயற்கைக்கோள் அங்கு ஒருமாதம் வரை பூமியிலிருந்து அதிர்வுகளை பதிவு செய்தது. ஆனால் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுவதற்கு முன் இம்மாதிரியான செயற்கைகோள் உதவியுடன் முன்னறிவிப்புப் பெறப்படாதது துரதிருஷ்டம்தான்.

2003ல் கலிபோர்னியாவிலுள்ள சான் சமீயன் என்ற இடத்தில் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தை அமெரிக்காவின் க்வாக்சாட் என்ற விண்கலம் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கை செய்தது.

ஜுன் 2004ல் பிரெஞ்சு அரசு இதற்குமுன் அனுப்பப்பட்ட விண்கலத்தைவிட அதிநவீன தொழில்நுட்பத்துடன் மற்றவைகளைவிட துல்லியமாக கண்காணிக்கக்கூடிய டிமீட்டர் (DEMETER – Detection of Electro&Magnetic Emissions Transmitted from Earthquake Regions) என்ற விண்கலத்தை அனுப்பி புவியில் ஏற்படும் அதிர்வு தகவல்களை பெற்றது.

இது பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியில் பாறைகளில் வழக்கத்திற்கு மாறாக அளவுக்கதிகமான எலக்ட்ரான் அணுக்கள் உற்பத்தியாவதை கண்காணிப்பதன் மூலம் சமிக்ஞைகளை பெற்றது. ஆனால் சமீபத்தில் அக்டோபரில் காஷ்மீரில் பூகம்பம் ஏற்படுவதற்குமுன் தான் துரதிருஷ்டவசமாக இந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளால் செயலிழந்தது. இதனால் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தை முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளை பெற இயலாமல் போய்விட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top