யார் ? இவர்கள் 12
கூர்ப்பினில் மனிதனும் பறக்கும் தட்டு வாசியும்
கூர்ப்பு
ஒரு இனம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார்.
இதன்படி மனிதனுடைய கூர்ப்பு மாற்றத்தை நாம் அவதானிப்பின்
1. நிமிர்ந்த தோற்றம் மேலும் ஒழுங்காக வருகிறது.
2. மூளையின் கனவளவுக்கும் உடலின் கனவளவிற்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கிறது.
3. பெருவிரலின் எதிரிடை ஆற்றல் அதிகரிக்கிறது.
4. நுட்பப்பிடி முறை ஆற்றல் விருத்தி அடைகிறது.
மேற்கூறப்பட்ட மாற்றங்கள் இதுவரை மனிதனில் நீண்டகால அடிப்படையில் மாற்றமடைந்து வருவதாகும்.
ஆகவே இம்மாற்றங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என்பது தெளிவாகிறது.
மனிதன் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தை அடைவான்.
முளையின் கனவளவு அதிகரிக்க தலையின் பருமன் கூடும். அதே நேரத்தில் அவனது உடல் மெலிந்து குறுகிய தோற்றம் உடையதாக மாறும்.
பெரும்பாலும் மனிதனில் பெரும் பயன்பாட்டிற்கு உள்ளாக்கப்படும் அங்கங்கள் வளர்ச்சியடைய மற்றயவை மெதுமெதுவாக மறையத்தொடங்கும்.
ஆகவே எமது எதிர்காலத்தவர்களின் தோற்றத்தை நாம் அனுமானித்து விட்டோம். அந்நிலையில் அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சியும் உயர்வாகும். (எமது தற்போதைய நிலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் மேம்பட்டது ) அவர்களின் மொழிகளும் தற்போதையதை விட வேறுபட்டதாக இருக்கும்.
இவ்வாறான ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு மிக உயர்வான வேகத்தில் பயணிக்கக்கூடிய வேகத்தைக்கொண்ட அவ்வாகனங்கள் கண்டுபிடிக்கும் போது அவர்கள் தமது இறந்தகாலத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர். இதன்புாது அவர்கள் 20ம் நூற்றாண்டு 21ம் நூற்றாண்டு உள்ள காலப்பகுதிகளுக்கும் வருவது சாத்தியமானது தானே?
நான் கூறவருவது புரிகிறதா?
அதாவது நாம் தற்போது அவதானிக்கின்ற அந்த விசித்திர உடலமைப்பைக் கொண்டவர்கள் தான் எமது எதிர்கால வாரிசுகள். பறக்கும் தட்டுக்கள் என்பது அவர்களின் வாகனங்கள். அவர்கள் தமது மூதாதையர்கள் ஆகிய நம்மை தமது ஆராய்ச்சி நோக்கத்திற்காக தேடி வருவது நியாயமானது தானே?
“ நாம் தற்போது அவதானிக்கும் குறிப்பிட்ட விசித்திரமானவர்கள் எமது எதிர்காலத்தோர் ஆவர் ”
ஆக மொத்தமாக 2 வழிவகையில் நான் எனது ஆய்வினை மேற்கொண்டேன். குறிப்பிட்ட விசித்திரமதனவர்கள்
1. வேற்றுக்கிரகத்தில் இருந்து வருகிறார்கள் என்ற அடிப்படையிலும்
2. எமது எதிர்காலத்தில் இருந்து வருகிறார்கள் என்ற அடிப்படையிலும் ஆராய்ந்தேன்.
எனது முடிவு
இரு கோணங்களிலும் பல சாத்தியப்பாடுகளையும் அலசி ஆராய்ந்திருக்கின்ற நிலையில் எனது முடிவாக வேற்றுக்கிரகத்தில் உயிரினங்கள் நிலவுகின்றன என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் மேற்படி தோற்றத்தை கொண்டிருப்பதற்கு சாத்தியம் குறைவு. ஆனால் மனித உருவம் தாண்டிய வேறு பல வடிவங்களில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
எனவே நாம் பூமியில் அவதானிக்கின்ற இந்த விசித்திர உருவங்கள் வேற்றுக்கிரக வாசிகள் என்கின்ற காரணத்தை விட எமது எதிர்கால வாசிகளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதுகிறேன். அதாவது அவர்கள் எமது பின்னோர்கள் ஆவர். அவர்கள் எமது வாழ்க்கை தொடர்பான பூரண ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிக்கின்ற போது எம்முடன் சுமூகமான தொடர்பை ஏற்படுத்த முனைவார்கள்.
நன்றி