வரலாற்றில் இன்று: ஜனவரி 17 (Today in History for 17th January)
நிகழ்வுகள்
1377 – போப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.
1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.
1595 – பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.
1631 – முகலாய மன்னன் சாஜகானின் மனைவி மும்தாஜ் பிரசவத்தின்போது இறந்தார். அவரின் நினைவாக தாஜ்மஹாலை சாஜகான் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது.
1648 – இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
1773 – கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
1819 – சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
1852 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது.
1893 – ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
1899 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
1928 – லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1940 – பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட பெரும்பகுதியை ஜேர்மன் படைகள் கைப்பற்றியதையடுத்து நேசநாடுகளின் படைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறத் தொடங்கின.
1944 – டென்மார்க்கிலிருந்து பிரிவதாக ஐஸ்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.
1945 – சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.
1946 – ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
1948 – அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 48 பேர் பலி.
1951 – சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
1961 – கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1973 – பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
1991 – வளைகுடாப் போர் ஆரம்பித்தது.
1992 – அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷும் ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினும் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1994 – தனது மனைவியையும் அவரின் நண்பரையும் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்க றக்பி நட்சத்திரமான ஓ.ஜே.சிம் ப்ஸனை நீண்டநேர கார் துரத்தலுக்குப் பின் பொலிஸார் கைது செய்தனர். இக்கார் துரத்தல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
1995 – ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலத்த சேதங்களும் ஏற்பட்டது.
1998 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
பிறப்புகள்
1706 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. 1790)
1911 – ஜோர்ஜ் ஸ்டிக்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1991)
1917 – எம்.ஜி.ஆர். , தமிழக முன்னாள் முதலமைச்சர் (இ. 1987)
1942 – முகமது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர்
1977 – என். சொக்கன், தமிழக எழுத்தாளர்
1982 – டுவேன் வேட், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1961 – பாட்ரிஸ் லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் (பி. 1925)
2002 – கமீலோ ஜோஸ் சேலா, நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் (பி. 1916)
2007 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர் (பி. 1925)
2008 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் (பி. 1943)
2009 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)
2010 – ஜோதிபாசு, இந்தியா மேற்குவங்க மாநிலத்தில் நீண்டநாள் முதல்வராக இருந்தவர் (பி. 1914)
சிறப்பு நாள்
காணும் பொங்கல்
எம்.ஜி.ஆர். , தமிழக முன்னாள் முதலமைச்சர்:-
நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும், சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறைக்கு சென்று, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும்பாலான மக்களை கவர்ந்தது.
அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இருந்த இவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.