யார் ? இவர்கள் 11
இறந்த காலத்தை அடைவோமா?
இறந்த காலத்தை அடைவது எப்படி?
இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம்.
பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம்.
சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம்.
ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம்.
இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவாக பாரிய குளறுபடிகள் சமூகவிரோதசெயல்கள் கூட இடம்பெற வாய்ப்பு உண்டு.
சரி, இவ்வாறு இறந்த காலத்தை நோக்கி நாம் பயணிக்கும் போது நினைத்த மாத்திரத்திலேயே நாம் விரும்பிய காலத்திற்குச்செல்லலாம் என எண்ணுவது தவறு.
நாம் சாதாரணமாக ஒரு வீதியில் பயணிக்கும் போது படிப்படியாகவே ஒவ்வொரு இடங்களையும் கடக்கிறோம். அதேபோன்றே காலத்துடன் பயணிக்கும் போதும் மெது மெதுவாக செல்வோம். எனவே குறுகிய நேரங்களில் எமது இறந்தகாலத்தில் உள்ள ஏதாவது ஒரு நிலையை அடையவேண்டுமாயின் எமது வாகனத்தின் வேகம் ஒளியின் வேகத்தை தாண்டினால் மாத்திரம் போதாது. இதையும் விட பெருமளவில் அதிகரிக்கும் போதே சாத்தியமாகும்.
இதுவரை பூரணவிளக்கம் அடைந்தோர் தொடர்ந்து வாசியுங்கள்……..
இதுவரை காலத்துடனான இயக்கம் பற்றி நான் விபரித்தது உங்களுக்கு தெளிவாகியிருக்கும் என எண்ணுகிறேன். அப்படியாயின் அடுத்து எனதுஆய்வின் முக்கிய கட்டத்தில் காலம் தொடர்பான இன்னொரு விளக்கத்தை முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.
அதாவது காலம் தொடர்பான இயக்கத்தை அடைவதற்கு தேவையான வேகத்தையுடைய வாகனம் இப்போது கிடைப்பது சாத்தியமானதா என்கிற கேள்வி எழும் போது அனைவரும் இல்லை என்ற பதில் கூறுவர்.
இதற்குக்காரணமாக மனிதன் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வேகத்தை எட்டமுடியாது என்பதே. இது ஒரு முக்கிய காரணமாகும் .
தற்போது நாம் இயங்கும் வாகனங்களின் வேகத்தைப்போல் பல ஆயிரம் மடங்கு வேகத்தை உடைய வாகனத்தை கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் போதாது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும்.
காரணம் நாம் தற்போது வாகனங்களின் வேகத்தை இயந்திரவலுவை அடிப்படையாகக்கொண்டே அதிகரிக்கிறோம். இதன்படி எமது வாகனங்களின் இயந்திரவேகமானது மெதுவாகவே அதிகரிக்கிறது. எனவே தான் அண்மைக்காலத்தில் இது சாத்தியமில்லை என்கிறேன்.
குறிப்பு :- நாம் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாகனங்களின் (விண்கல ஏவுகணை உட்பட) வேகமும் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்கவை.
அதுவரை என்ன நடக்கும் ?
இதன்போது இன்னொரு விடயமாக கூர்ப்பு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.
தொடரும்…