Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » புரியாத புதிர் – யார் ? இவர்கள் 10

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 10

யார் ? இவர்கள் 10

காலத்துடனான ஓர் பயணம் 03

நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா?
ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும்.
உதாரணமாக
நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் மிகவும் குறைவானது. எனவே அதைப்பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனில்
  • மிக மிக மிக …………………………. குறைந்த நேரங்களையும் அளவிடக்கூடிய கடிகாரம் வேண்டும்.
அல்லாது விடில்
  • நாம் இயங்கும் வாகனங்களின் கதியை மிகவும் அதிகரித்தால் அந்த நேரவித்தியாசத்தை உணரமுடியும்.
அதாவது ஒருவர் அவ்வாறு உயர்வேகத்தில் இயங்கினால் அவ்வாறு இயங்குபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் போவார். ஏனெனில் அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவானவர்.
நாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடிய வகையிலான வேகமுடைய வாகனங்களில் இயங்குவோமாயின் இந்த மாற்றத்தை உணரமுடியும். அதாவது இயங்குகின்ற எமக்கு காலத்தில் ஏற்படும் மாற்றம் வழமையானது போல தென்படினும் அது உண்மையில் வழமையானது அல்ல. எம்மை விட முன்னோக்கிய காலத்தை அனுபவித்தவர்களாக வாகனத்திற்கு வெளியே இருப்பவர்கள் காணப்படுவார்கள்.
கவனிக்கவேண்டியது
நான் கூறுகின்ற வேகமானது ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடியதாயினும் ஒளியின் வேகத்தை விட குறைவானது.
சரி, இப்போது ஒரு கேள்வி எழக்கூடும்.
அதாவது மற்றவர்கள் எம்மை விட முந்திச்செல்கின்ற காலத்தில் இருப்பார்கள் எனின் எமது நிலை என்ன?
அவர்களுடன் ஒப்பிடும் போது குறைவான காலத்தில் உள்ள நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்களது இயல்பான காலத்தின் இறந்தகாலமாகி விடுவோம். அதாவது நாம் சிறிது நேரத்தின் பின் வாகனத்தில் இருந்து இறங்க நேரிடின் அப்போதும் எம்மால் மற்றவர்களை கணமுடியும். ஆனால் அது தற்போது எமது இயல்பான காலத்தில் இருக்கவேண்டியவர்களின் எதிர்காலத்தோற்றமாகும்.
உதாரணமாக இதனை இரு நபர்களை வைத்து விளக்கலாம் என எண்ணுகிறேன்.
…. கோபு, கோகுல் என்ற இரு சகோதரர்களை கருதுக.
கோகுல் ஆனவர் உயர்வேகத்தில் இயங்கும் வாகனத்தில் இயங்குகிறார் எனின் அவர் சிறிது நேரத்தில் கோபுவிற்கு புலப்படாது போவார். பல மணித்தியாலயங்களின் பின் கோகுல் தனது இயக்கத்தை முடித்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வருவாராயின் அவரால் கோபுவைக்காணமுடியும். ஆனால் எக்காலத்தில் இருந்து அவர் வந்தாரோ அக்காலத்தில் இருந்த கோபுவினுடைய இயல்பான காலத்திற்குரிய கோகுலை கோபுவால் காணமுடியாது.
ஆனால்ஒளியின் வேகத்தை விட குறைந்த வேகத்தில் இயங்கும் வரை அவர் இயங்கத்தொடங்கிய நிலையின் பின்னரான நிகழ்வுகளையே அவரால் அனுபவிக்க முடியும்.
அதாவது நாம் வாகனத்தில் இயங்க தொடங்கிய பின்னர் வரும் நிகழ்வுகளில் ஏதோ ஒரு நிலையை அனுபவிக்கலாம்.
அப்படியாயின் எமது இறந்தகாலத்தை நாம் அடைவது எப்படி?
தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top