காலத்துடனான ஓர் பயணம் 02
காலம் எனும் பாதையில் மற்றவர்களை விட நாம் விரைவாக பயணிக்க முடியுமா? பாதையில் தவறவிட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா?
இக்கேள்வியானது நகைப்பிற்கு இடமாக தோன்றலாம்.
இழந்த நேரத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விடயமாகும். வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்க்க முடியுமே தவிர மீண்டும் நாம் அங்கு செல்ல முடியாது என அனைவரும் கூறுவது வழக்கமாகும்.
நாம் செல்லவே முடியாத ஒன்றிற்கு எமது நினைவு மாத்திரம் எவ்வாறு செல்கிறது? சிலவேளைகளில் எமது நினைவானது எதிர்காலத்தையும் எண்ண முடிகிறதே… இது எவ்வாறு சாத்தியம்? இக்கேள்விகளுக்குரிய ஒரே பதில் நினைவு விரைவானது.
நினைத்துப்பார்க்க முடியாத உயர்வேகத்தை உடையது என்பது தான். அதாவது நாம் இருக்கும் இடத்திலிருந்து எம்மால் அறியப்பட்ட மிக உயர் தூரமுடைய இடத்தையே கணப்பொழுதில் நினைத்து விடுகிறோம்.
உதாரணமாக,
நாம் இலங்கையில் கொழும்பில் இருப்பதாக எண்ணிக்கொள்வோம்.
1. கொழும்பில் உள ரயில் நிலையத்தை நினைக்கிறோம் எனில்,
அதனை எமது சாதாரண வாகனங்களால் அடைந்து கொள்ள முடியும்
உ-ம் சைக்கிள் தரத்திலானவை
2. கண்டி மாநகரை நினைக்கிறோம் எனில்,
எம்மால் அப்பிரதேசத்தை கார், இரயில் போன்றவற்றால் அடையமுடியும்
3. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை நினைப்போமாயின்,
அவற்றை விமானம், கப்பல் போன்றவற்றால் அடையமுடியும்.
4. சந்திரன், செவ்வாய் போன்றவற்றை நினைக்கிறோம். அவற்றை விண்கலங்கள் மூலம் அடைய முடிகிறது.
அதாவது எமது நினைவுகள் எவ்வளவிற்கு எவ்வளவு விரிகிறதோ மிகவுடனே செல்கிறதோ அவற்றை எம்மாலும் அடையமுடியும். ஆனாலும் நினைவின் வேகத்தின் அதிகரிப்பைப்போன்று நாம் இயங்கும் வாகனத்தின் கதியும் உயர்வாக வேண்டும்.
நினைவின் வேகத்திற்கும் நினைத்தவற்றை நாம் அடைய உபயோகிக்கும் வாகனத்தின் வேகத்திற்கும் இடையில் நாம் ஒரு வரைபை வரைந்தால்.
அதாவது நினைவின் வேகத்துடன் ஒப்பிடும் போது எமது வாகனத்தின் வேகம் மிகவும் சிறிது.
நான் இதுவரை கூறியது நினைவிற்கும் தூரத்திற்குமான மாறல் பற்றியதாகும்.
எனினும் நினைத்ததை காலத்தால் தமது உடலுடன் சேர்ந்து அடைந்தவர்கள் என்று யாரும் இதுவரை இப்பூமியில் நாம் அறிந்தவரைக்கும் இல்லை எனலாம்.
ஆனாலும் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியை தமது உடலில் உணர்ந்து கொண்டு அச்சக்தியின் மூலம் தமது மனதை இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செலுத்தி அச்சம்பவங்களைக்கூறிய பலரை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
இது அவ்வாறு இருக்க நாம் உடலுடன் எவ்வாறு காலத்திற்கு எதிராக பயணம் செய்வது?
தொடரும்…