Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » புரியாத புதிர் – யார் ? இவர்கள் 08
புரியாத புதிர் – யார் ? இவர்கள் 08

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 08

யார் ? இவர்கள் 08

காலத்துடனான ஓர் பயணம்..

ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் நான் “Unidentified Flying Object” ( பறக்கும் தட்டுக்கள்) வேறு கிரகத்தில் இருந்து வருகின்றது எனும் அடிப்படையில் ஆராய்ந்தேன். அத்துடன் நம்மால் ( பூமியிலுள்ளோரால் ) அவதானிக்கப்பட்ட சில விசித்திர தோற்றம் கொண்ட அடிப்படையில் மனித உருவத்தை ஒத்திருந்த சிலர் வேறு கிரகத்தில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்தேன்.
அக்கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் அவை பற்றிய மக்களின் கருத்துகள் என்பவற்றை உலகளாவிய ரீதியில் அலசி ஆராய்ந்த போது குறிப்பிட்ட விசித்திரமானவர்கள் சம காலத்தில் வேற்றுக்கிரகங்களில் இருந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆனாலும் மேற்குறிப்பிட்ட ஆய்வை இன்னோர் அடிப்படையில் தொடரலாம் என எண்ணுகின்றேன். எனினும் இவ் ஆய்வை தொடர்வதற்கு முன் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய தேவை ஒன்று காணப்படுகின்றது.
அவையாவன,
1. காலத்துடனான இயக்கம்
 
2. கூர்ப்பு பற்றிய கொள்ளைகள் ஆகும்.
காலம் என்பது என்ன?
இதுவரை எம்மால் அறியப்பட்ட வரைக்கும் காலம் என்பது வாழ்வில் நாம் கடக்கும் பாதையின் அளவுகோல் எனலாம். காலமாற்றத்தை இலகுவாக அளந்துகொள்வதற்கும் அதனை தெளிவாக உணர்ந்து புரிந்துகொள்வதற்குமாக நாம் அந்தப்பாதையில் சில கற்களை நாட்டியுள்ளோம். அவை பல வகைப்படும்.
வருடம்…… நிமிடம்….செக்கன்..
ஆனால் இந்தப்பாதையில் மனிதர்கள் பயணிப்பது பற்றி நோக்கின் இந்தப்பாதையில் ஓரிடத்தில் மனிதர்கள் இணைந்து கொள்வதும் இன்னோரிடத்தில் பிரிவதுமாக (இறப்பதுமாக) நிகழ்கிறது. இந்தப்பாதையில் இணைகின்ற அந்த உயிரினங்கள் அந்தப்பாதையை பற்றி உணர்வதில்லை.
உணர முயற்சிப்பினும் அது பாதையின் நீண்ட தூரத்தை கடந்தபின்னரே நிகழ்கிறது. இங்கு நீண்ட தூரம் என நான் குறிப்பிடுவது அவர்களின் வாழ்க்கையின் காலத்துடன் ஒப்பிட்டதாகும். எனினும் அந்தப்பாதையின் நீளம் எவ்வளவு? அந்தப்பாதை எங்கே ஆரம்பிக்கப்பட்டது? என்பவற்றிற்கு யாராலும் பதில் கூறமுடியவில்லை.
இது பற்றி எழுந்த சில கொள்கைககள் நமது விஞ்ஞானத்தை திருப்திப்படுத்த முனைகிறதா என்பதை அடுத்து நோக்குவோம்.
விஞ்ஞான வளர்ச்சியைப்பொறுத்த வரைக்கும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (இன்று வரைக்கும்) கொள்கையாக விளங்குவது “Big Bang Theory” ஆகும். இதில் நாம் இருக்கும் பூமி உள்ளிட்ட கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஆனது ஆரம்பத்தில் ஒரு சிறிய புள்ளித்திணிவிலிருந்து தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிறிய புள்ளித்திணிவானது விரிய ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் தற்போதைய விளைவே நாம் வாழும் இப்பிரபஞ்சம் எனவும் எதிர்காலத்தில் இந்த விரிவு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலம் எனும் பாதையில் மற்றவர்களை விட நாம் விரைவாக பயணிக்க முடியுமா? பாதையில் தவறவிட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா?
தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top