யார் ? இவர்கள் 05
பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது.
எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது.
இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து
“ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’
மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளுக்குமான சில உதாரணசம்பவங்களை அடுத்து நோக்குவோம்.
ஆண்டு :- 2006
இடம் :- இலங்கை (தேவேந்திரமுனையை அண்டிய கிராமம்)
இப்பிரதேசத்தில் சில வேற்றுக்கிரகவாசிகளை அவதானித்து பின்தொடர்ந்த கிராமவாசிகள் வேற்றுக்கிரகவாசிகள் தம்மை திரும்பிப்பார்த்த போது தாம் மயக்கமுற்றதாக கூறினர்.
இச்சம்பவம் வேற்றுக்கிரகவாசிகளின் உயர் ஆற்றலை பரிணாம வளர்ச்சிகாரணமாக கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
(பூமியிலுள்ளோரின் மொழியில் கூறினால் மந்திரம், மாயம்)
2.பல சந்தர்ப்பங்களின் போதும் மக்களால் வேற்றுக்கிரகவாசிகள் பின் தொடரப்பட்டபோது அவர்கள் திடீரென மறைந்து போனமை.
இச்சம்பவங்கள் வேறுபட்ட பரிமாணங்கள் ஊடாக இயங்கும் தகவைக் கொண்டிருக்ககூடும் என்ற ஐயப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் அவர்கள் சூழலுக்கேற்ப உடலமைப்பை மாற்றுகின்ற திறனைக்கொண்டிருக்க்க் கூடும் என்பதற்கும் வலுச்சேர்க்கிறது.
அவர்கள் திடீரென மாயமாக மறைவதும் பறக்கும் தட்டுக்கள் பூமியின் அதியுயர் தொழில்நுட்பக்கருவிகளில் சிக்காமையும்.
இச்சம்பவங்கள் குறிப்பிட்ட வேற்றுக்கிரக வாசிகள் பயன்படுத்தும் மூலகங்கள், பொருட்கள் ஒளியை உறிஞ்சும் தகவுடையதாக இருக்கலாம் என்கிற கருத்தை உறுதிப்படுத்துகிறது.
குறிப்பு :- ஒரு பொருளானது பூமியிலுள்ளோரின் பார்வைப்புலத்தால் உணரப்பட வேண்டுமானால் அப்பொருளில் பட்டுத்தெறிக்கும் ஒளிக்கதிர் எம் கண்ணை அடைய வேண்டும். தெறிப்பு நடைபெறாமலோ அல்லது தெறித்த கதிர் எம் கண்ணை அடையாவிட்டாலோ எம்மால் அப்பொருளை அவதானிக்கமுடியாது.
ஆகவே ஒளியை உறிஞ்சக்கூடிய பொருட்கள் இல்லாவிடினும் குறிப்பிட்ட வேற்றுக்கிரக வாசிகள் தெறித்த ஒளியை திசைதிருப்பக்கூடிய ஆற்றலையாவது கொண்டிருக்கலாம்.
ஏற்கனவே அவதானிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் வேற்றுக்கிரகவாசிகள் தாம் பின்தொடரப்படுவதை விரும்பவில்லை. இச்சந்தர்ப்பங்களில் அவர்கள் பின்தொடர்ந்தவர்களை தமது விசித்திரமான இயலுமைகள் மூலம் மயங்கச்செய்துள்ளனர். எனவே இச்சம்பவங்கள் மூலம் அவர்களின் நோக்கம் எமக்கு சாதகமானதாக இருக்காது என்றே எண்ணத்தோன்றுகிறது.
அப்படியென்றால் ஏன் அவர்கள் எமது கிரகத்தில் இன்னும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தத்தொடங்கவில்லை? என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது.
1. நாம் வேறு கிரகங்களை ஆய்வுசெய்ய முயற்சி செய்வது போல் அவர்களும் தமது ஆய்வின் ஒரு பகுதியாக எமது கிரகத்திற்கு வருகைதரக்கூடும்.
2. மாறாக ஆக்கிரமிப்பு நோக்கத்தை கொண்டிருப்பின் தமது உளவு நடவடிக்கைகளை முடிக்காமலேயே இங்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்த விரும்பாமல் இருக்க்க்கூடும்.
3. ஏற்கனவே இப்பூமியில் இடம்பெறும் மர்ம உயிரிழப்புக்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்.
4. எம்மீது அழிவுகளை ஏற்படுத்தாது எதிர்காலத்தில் எம்மை முழுமையாக தமது அடிமைகளாக மாற்றுவதற்குரிய திட்டங்கள் தற்போது அரங்கேறிக்கொண்டிருகக்கூடும்.
அடுத்து மேற்கூறப்பட்ட ஒவ்வோர் சாத்தியப்பாடுகளையும் ஆராய்வோம்…..