யார்? இவர்கள் 01
முன்னுரை
ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது.
அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது.
உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன.
என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O UNIDENTIFIED FLYING OBJECTS) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த“U.F.O”கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன.
எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை.
ஆகவே இதுவரை நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிட்டு அச்சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர் கொண்ட சவால்களையும் தெரிவித்து இனிவரும் காலங்களில் பறக்கும் தட்டுகள் தொடர்பாக ஏற்படக்கூடிய அனைத்து சம்பவங்களையும் வெற்றிகரமாக எதிர் கொள்ளத் தேவையான அறிவைப் பெற்றுக் கொடுப்பதே எனது ஆய்வின் முக்கிய நோக்கமாக காணப்படுகிறது.
சில உதாரணங்கள்
பறக்கும் தட்டுகள்
1. 1998 / மார்ச்சு / 14, 15, 16
இடம் :- குயின்ஸ்ராந்து கிங்காராய்
அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்
கருத்து :- மாலை 6.40 அளவில் தொடுவானத்தில் வெள்ளை நிறமான பிரகாசமான விளக்குகள் கொண்ட அடிப்பகுதி அகன்ற வட்டமும் மேற்பகுதி கூம்பியும் இருந்த தட்டுகள் பறந்து சென்றன. ( மிகவும் விரைவாக )
2. 1998 / மார்ச்சு / 17
இடம் :- குயின்ஸ்ராந்து கிங்காராய்
அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்
கருத்து :- மாலை 6.30 அளவில் கறுப்பு நிறமான வெள்ளை விளக்குகள் கொண்ட வட்ட வடிவமான தட்டுக்கள் பறந்து சென்றன.
3. 1998 / மார்ச்சு / 23
இடம் :- பிந்தூன் மேற்கு ஆசியா
அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்
கருத்து :- இரவு 9.45 மணிக்கு வெளிர் மஞ்சள் நிறமுடைய தட்டு ஒன்று சிவப்பு பச்சை விளக்குகளை கொண்டு பறந்தது.
4. 1998 / ஏப்ரல் / 23
இடம் :- மெல்போர்ன் அவுஸ்திரேலியா
அவதானித்தவர் :- பாப்வாட்டர் மேன்
கருத்து :- இரவு 7.30 மணிக்கு மொட்டை மாடியில் நின்று அளவளாவிக்கொண்டிருந்த போது பல வர்ண விளக்குகளைக்கொண்ட வட்டத்தட்டு ஒன்று மிக வேகமாக உரத்த சத்த்த்துடன் சென்றது.
குறிப்பு இதன் சத்த்த்தை பிரதேசவாசிகளும் கேட்டுள்ளனர்.
5. 1998 / ஏப்ரல் / 22
இடம் :- அவுஸ்திரேலியா
அவதானித்தவர் :- ஓய்வுபெற்ற விமானக்கப்டன்
கருத்து :- மாலை 6.40 இற்கு நடைப்பயிற்சியிலிருந்த போது மிகப்பெரிய வட்டவடிவமான ஒளிரும் பொருள் மிக வேகமாக எம்மைக்கடந்து சென்றது. இதன் ஒலி மிகவும் உரப்பு கூடியதாக இருந்தது.