ஷில்போல்டனில் மனித முகத்துடன் பயிர் வட்டம் உருவாகியது பற்றிச் சொல்வதற்கு முன்னர், நான் சில விசயங்களை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லி விடவேண்டும். இனி நீங்கள் தெரிந்துகொள்ளப் போகும் ஒவ்வொன்றிலும், “இதையெல்லாம் நாம் எப்படி நம்புவது?” என்ற அவநம்பிக்கையான கேள்வியே உங்களிடம் தோன்றிக் கொண்டிருக்கும். உங்களுக்கும், உலகில் உள்ள பலருக்கும், அதிகம் ஏன், எனக்கும் கூட இவை நம்ப முடியாதவைதான். நம்ப வேண்டிய அளவுக்கு ஆதாரங்களையும், சாட்சிகளையும் முன் வைத்தாலும், மனம் ஏனோ நம்ப மறுக்கிறது. காரணம், இவற்றை நம்பினால் நாம் எடுக்கும் முடிவு ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அந்த முடிவு, ‘ஏலியன்கள் பூமிக்கு வந்து போகின்றன’ என்பதுதான். ஏலியன் பற்றிய சந்தேகம் நம்மில் அனைவருக்கும் இருந்தாலும், முழுமையாக அதை நம்மால் நம்ப முடிவதில்லை. நான் எழுதுவதை நீங்கள் வாசித்து விட்டு, ஏலியன்கள் இருப்பதாக நான் சொல்ல முயற்சிக்கிறேன் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம். அது என் நோக்கமும் இல்லை. ஆனால் ஏலியன்கள் பற்றிய சாத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அத்துடன், பயிர் வட்டங்களை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும், இல்லை அது வேறு ஒரு சக்தியினால்தான் உருவாக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களையும் ஒன்றுவிடாமல் சொல்வேன். இறுதியில் நம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முடிவுக்கு நிச்சயம் நாம் வரமுடியும்.
ஷில்போல்டன் ரேடியோ டெலஸ்கோப் அமைக்கப்பட்ட இடத்துக்கு மிக அருகில், 2000 ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி ஒரு பயிர் வட்டம் உருவாக்கப்பட்டது. அது ‘ஃப்ராக்டல்’ (Fractal) என்று சொல்லப்படும் ஒருவித வடிவமைப்பைக் கொண்டது. கணிதத்தில் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்ட ஒரு வடிவம் இது. ஒரு குறிப்பிட்ட வடிவம் பல அடுக்குகளாகப் பெருகி உருவாகும் சித்திரத்தை ‘ஃப்ராக்டல் வரைவு’ (Fractal art) என்று சொல்வார்கள். இதில் ‘ஜூலியா செட்’ (Julia Set Fractal), ‘மாண்டல்புரோட் செட்’ (Mandelbrot Set Fractal) என வகைகள் இருக்கின்றன. இவை பற்றி நான் ஏன் இங்கு இவ்வளவு விளக்கமாகச் சொல்கிறேன் என்றால், பயிர் வட்டங்களில் பல, இந்த ஃப்ராக்டல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பதுதான். கணனிகளினால் உருவாக்கக் கூடிய இந்த ஃப்ராக்டல் வடிவங்களை, பயிர்களினால் உருவாக்குவதென்பது மிகவும் ஆச்சரியமான, சாத்தியமற்ற ஒரு விசயம். அப்படி உருவாக்க முடியுமென்றாலும் அதற்குப் பல பேர் சேர்ந்து, பல நாட்கள் உழைக்க வேண்டும். ஆனால் ஒரே இரவில், நான்கு மணித்தியால நேரங்களுக்குள் இவை உருவாக்கப்படுகின்றன. இது போன்ற ஒரு ஃப்ராக்டல் வடிவப் பயிர் வட்டம்தான் ஷில்போல்டனில் உருவானது.
இந்த ஃப்ராக்டல் பயிர் வட்டம் உருவானபோது, வழமை போல உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டமாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அப்படி ஒரு வடிவத்தில், பயிர் வட்டம் அங்கு ஏன் அமைக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடை, சரியாக ஒரு வருடத்தில் கிடைத்தது. 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி இரவு மனித முகத்துடனும், அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் இன்னுமொரு சிக்கலான வடிவத்துடனும் இரண்டு பயிர் வட்டங்கள், அதே இடத்தில் உருவாக்கப்பட்டன.
வழமையான பயிர் வட்டங்கள் போல இவை காணப்படவில்லை. இரண்டுமே செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு மனிதனின் முகம் கணனியில், ஃபோட்டோவாக வரையப்படும் போது, எப்படிக் கறுப்பு, வெள்ளை ஒளி மாற்றங்கள் (Shading) இருக்குமோ அப்படி அந்த மனித முகம் அமைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், முப்பரிமான அமைப்புடன் (3D) அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்தது. முப்பரிமாணத் தோற்றம் உருவாவதற்காக, பயிர்கள் சிறியதும், பெரியதுமாகவும், அடர்த்தி கூடியதும், அடர்த்தி குறைந்ததுமாகவும் வட்டவடிவப் புள்ளிகள் போல (Pixel) மிக நேர்த்தியுடன் அழுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தன. ஒரே இரவுக்குள் அது உருவாக்கப்பட்டது என்று யார் சொன்னாலும் நம்ப முடியாத சித்திரம் அது.
என்று சிந்தித்த வேளையில், இதே போன்ற முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற நினைப்பு பலருக்குத் தோன்றத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்துக்கு 1976 இல் சென்ற வைகிங் (Viking) விண்கலம் பல படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பியது. அந்தப் படங்களில் மனித முகம் ஒன்று செவ்வாயின் நிலப் பகுதியில் பதிந்திருப்பது போன்ற ஒரு படமும் காணப்பட்டது. அந்த நேரங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது அது. அந்த முக அமைப்பை இந்த நேரத்தில் பலர் ஞாபகத்தில் கொண்டு வரத் தொடங்கினர். உண்மையில் அதற்கும், இதற்கும் சம்மந்தம் உண்டோ, இல்லையோ என்று தெரியாவிட்டாலும், பலருக்கு ஷில்போல்டன் படத்துக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் உண்டு என்ற நினைப்பு வர ஆரம்பித்தது. இந்த நினைப்பை உறுதிப்படுத்தியது இரண்டாவதாக உருவாகிய பயிர் வட்டம்.
காணப்படுமோ, அப்படிக் காணப்பட்டது அது. அதைப் படமெடுத்து கணினியில் கொடுத்து படிப்படியாக ஆராய்ந்த போதுதான், பல மர்மங்களுக்கான விடைகள் வெளிவரத் தொடங்கியது. அந்த மர்மங்கள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அந்த மர்மம் என்னவென்று விளக்கமாக நமக்குப் புரிய வேண்டுமென்றால், ‘கார்ல் சேகன்’ (Carl Sagan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
கார்ல் சேகன் என்னும் அமெரிக்கர் வானியல் துறையில் மிகப் பிரபலம் வாய்ந்த ஒரு விஞ்ஞானி. இவர் ஆஸ்ட்ரானாமர், ஆஸ்ட்ரா ஃபிஸிஸிஸ்ட், காஸ்மாலாஜிஸ்ட், விஞ்ஞான எழுத்தாளர் எனப் பல பரிமானமுள்ளவர். இருபதுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றுதான் ‘காண்டாக்ட்’ (Contact). இந்தப் புத்தகம் எந்த மாற்றமுமில்லாமல், காண்டாக்ட் என்ற பெயருடனே, 1997 இல் ‘ஜோடி ஃபோஸ்டர்’ (Jodie Foster) நடித்துத் திரைப்படமாக வெளிவந்தது. உலக ரீதியாக வசூலை அள்ளிக் குவித்த படங்களில் இதுவும் ஒன்று.
மனிதர்கள் வேற்றுக் கிரக வாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் கதையை மையமாக வைத்து, இந்தப் படம் மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தது (முடிந்தால் கட்டாயம் பாருங்கள்). இந்தக் கதையை எழுதிய கார்ல் சேகன், பிரபஞ்சத்தில் பல இடங்களில் உயிரினங்கள் உண்டு என்பதைத் தீர்க்கமாக நம்பினார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி விண்வெளிக்கு ஒரு செய்தியை அனுப்பினார். பூமியில் நாம் வசிக்கிறோம் என்ற செய்தியுடன், நம்மைப் பற்றிய விபரங்களை வரைபடமாக்கிப் பின்னர் அதை 0, 1 என்னும் பைனரி வடிவத்தில் ரேடியோ அலைகளாக விண்வெளிக்கு அனுப்பினார். குறிப்பாக, பூமிக்கு மிக அருகில், 25 ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் Messier 13 என்று சொல்லப்படும் M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி அனுப்பி வைத்தார். M13 இல் மூன்று இலட்சத்துக்கு அதிகமான நட்சத்திரங்களும், கோடிக்கணக்கான கோள்களும் இருக்கின்றன. அங்கு ஏதாவது ஒரு கோளில் உயிரினம் இருந்து இந்தச் செய்தியைக் கண்டறிந்து பூமியுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதே கார்ல் சேகனின் எண்ணம்.
வேற்றுக் கிரகங்களில் உயிரினம் உண்டு என்பதை எந்த விஞ்ஞானியும் இதுவரை மறுக்கவில்லை அப்படி உயிரினம் இருக்கும் பட்சத்தில் அவை அதிபுத்திசாலிகளாக இருக்கவே சாத்தியம் அதிகம் என்பதும் இவர்கள் கணிப்பு இந்தக் கணிப்பை அடிப்படையாக வைத்தே கார்ல் சேகன் செய்திகளை அனுப்பி வைத்தார் போர்ட்டா ரிக்கோ நாட்டில் உள்ள ஆரசிபோவில்Arecibo-Puerto Rico) அமைந்துள்ள பாரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தே அந்தச் செய்திகள் அனுப்பப்பட்டன அவர் அனுப்பிய செய்தி என்ன தெரியுமாஅதன் வரைபடத்தை நீங்கள் பார்த்தால்தான் இதுவரை நான் ஏன் கார்ல் சேகன் பற்றி இவ்வளவு விபரங்கள் சொன்னேன் என்பது புரியும்அவர் அனுப்பிய செய்தியின் வரைபடம் இதுதான்
என்ன புரிகிறதா ஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் அமைப்புக்கும்கார்ல் சேகனின் செய்திக்கும் சில மாற்றங்கள் தவிர்ந்து வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தெரிகிறதா புரியவில்லையெனின் அந்த இரண்டு சித்திரங்களையும் ஒன்றாகப் பார்த்தால் உங்களுக்குப் புரியலாம்
இந்தப் படத்தில் வலது பக்கம் இருப்பது கார்ல் சேகன் அனுப்பிய செய்தி இடது புறம் இருப்பது ஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் படம் இரண்டு படங்களையும் பார்க்கும்போது ஒன்று போலவே தோன்றினாலும் நன்கு கவனித்தால்பல வித்தியாசங்கள் தெரியும் அந்த வித்தியாசங்கள் என்ன என்று ஆராய்ந்தபோது கிடைத்த பதில் எல்லாமே அதிர்ச்சிகரமானவை கார்ல் சேகன் ஆண்டு அனுப்பிய செய்திக்கு 27 ஆண்டுகளுக்கு அப்புறம் ஏலியன்கள் கொடுத்த பதில்தான் அந்த ஷில்போல்டன் பயிர் வட்டம் என்கிறார்கள் அதை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தவர்கள் கார்ல் சேகன் நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அப்படி என்ன செய்திகளை அனுப்பினார் அதற்கு நமக்குப் பயிர் வட்டங்கள் மூலமாகக் கிடைத்த பதில்கள்தான் என்னஅவற்றை அடுத்த தொடரில் பார்ப்போமா