இதோ மரணத்தின் மர்மங்கள் இவை தான் என்று திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற எவராலும் முடியாது. இறந்தவர் எவரும் கல்லறையிலிருந்து வெளிக்கிளம்பி வந்து மரணத்தின் மர்மங்களைத் துலக்கியதாக வரலாறு இல்லை. மரணத்தைப் பற்றி எழுதும்பொழுது வேதங்கள் கூறுவதையும், வேதாந்த பாஷ்யங்கள் எடுத்துரைப்பதையும், உலகத்தின் பல்வேறு சமயத் திருமுறைகள் விளம்புவதையம் மரபுவழியாக வந்த சான்றுகளையும் நம்பிக்கைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகின்றது. ரிஷிகளும் ஞானிகளும் யோகிகளும் சுவானுபூதியில் தாம் உணர்ந்த பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். பிரம்மஞான சங்கத்தைச் (theosophical Society) சேர்ந்த சிலர் ... Read More »