பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology அ. முதல் கட்டமாக பிரபஞ்சம் விரிவடைவதைத் துரிதப் படுத்திக் கொண்டிருப்பதும் பிரபஞ்சத்தில் மிக அதிகளவாகக் காணப்படுவதுமான கரும் சக்தியைப் பற்றிய தகவல்களை ஆராய்வோம். நமது பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காது ஒளி வீசிக் காணப்படும் நட்சத்திரங்கள், சூப்பர்நோவாக்கள், மற்றும் குவாசர்கள் என்பவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பிரபஞ்சம் முழுவதும் இருளாகவே காணப்படும். இதற்குக் காரணம் பிரபஞ்சத்தில் மிகப் பெரியளவு இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்திருப்பதே ஆகும். ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு ... Read More »
Yearly Archives: 2014
உதவி கேட்ட தாய்!!!
December 27, 2014
உதவி கேட்ட ஆவி..! ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர். சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருவதை பார்த்தனர். உடனே மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்று எச்சரித்தாள். ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார். நாங்கள் வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கே நிற்கிறது, என் ... Read More »
நடுங்க வைத்த நாஸ்ட்ரடாமஸ்!!
December 27, 2014
நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் ... Read More »
இன்கா தங்கப்புதையல்!!
December 27, 2014
இன்கா தங்கப்புதையல் லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு. 1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா. ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 10
December 27, 2014
இயற்கை அன்புப் பிணைப்புக்கு முதலிடம் கொடுக்கின்றது. நாம் வெகுவாக நேசித்த ஒருவர் இறந்து விட்டால் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போது நமது சூட்சும சரீரம் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை உணரலாம். நாம் அவருடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுகள் ஸ்தூல சரீரத்தில் ஓரளவு பிரதிபலிக்கின்ற போதிலும் கண் விழித்தவுடன் எல்லாமே மறந்து விடுகின்றன. பக்கத்தில் படுத்திருப்பவர்கள் இதை அவதானிக்கக் கூடியதாயிருக்கும். இறந்தவரைப் பற்றிய நினைவுடன் நாம் இருப்பதால் அடிக்கடி அவரைப் ... Read More »
இந்திய இணைய இணைப்பு வேகம்!!!
December 26, 2014
இந்திய இணைய இணைப்பு வேகம் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா ... Read More »
ரோஸ் ஏரி??!!
December 26, 2014
சுற்றிலும் பச்சைப்பசேல் எனவும் நடுவில் மட்டும் ரோஜா நிற வண்ணத்தைக் கொட்டியதுபோல் இருக்கிறதே என்ன இது? மேற்கு ஆஸ்திரேலியாவின் மிடில் ஐலாண்டில் உள்ள ரோஸ் ஏரிதான் இது. 600 மீட்டர் நீளம்கொண்ட இந்த ஏரி, எப்படி இந்த வண்ணத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து யோசித்தார்கள். சமீபத்தில்தான் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த நீரில் குறைந்த ஊட்டச்சத்துகொண்ட பாக்டீரியா உள்ளதாம் அவற்றால்தான் இந்த வண்ணம். Read More »
ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்கள் – Bilocation எனும் அமானுடம்!…
December 26, 2014
ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்கள் – Bilocation எனும் அமானுடம்!… இன்று பார்க்கப்போவது, பெளதீக விதிகளுக்கு முரணான அறிவியலால் இதுவரை விளக்க முடியாது இருக்கும் ஒரு பகுதியைப்பற்றி… அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு, 22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த “பலஸ் தெல் கொதி” இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக்கொண்டிருந்தார்….சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்து ... Read More »
தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?
December 26, 2014
தண்ணீருக்கு ஹச்o2 என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில் தான் முதன் முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராணவாயு ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 9
December 26, 2014
மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை இழந்து விடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற “நான் இருக்கிறேன்” என்ற நினைவு (பிரக்ஞை) தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படியாகத் தொடர்கின்ற பிரக்ஞையை ஆத்மா (Soul) என்றும் ஆவி (Spirit) என்றும் தன்முனைப்பு (Ego) என்றும் உளம் (Psyche) என்றும் உயிர் என்றும் மனசு என்றும் தத்துவஞானிகள் அவரவரின் சமயத்திருமறைகளின் கண்ணோக்கில் விவரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் “நான் இருக்கிறேன்” என்ற பிரக்ஞை இருக்கிறது. இங்கு ஐம்புலன்களின் தனித்தனி உணர்வுகளைக் குறிப்பிடவில்லை. நாம் ... Read More »