ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்து க்கொண்டான்.
அக்காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோப மடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டு பிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.
ஆனால் அதிர்ஷ்ட வசமாக சீக்லேண்ட் சாகவில்லை.
அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது.
சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான்.
ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டிவிட முடியவில்லை.
எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான்.
அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண் டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலே யே சீக்லேண்ட் மரணம் அடைந்தான்.
பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது.
இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங் கள் என்ற புத்தகங்களில் விவ ரிக்கப்ப ட்டுள்ளன