வடக்கு ஆஸ்திரேலியா கடலில் கூன்முதுகு கொண்ட புதிய வகை டால்பின் கண்டுபிடிப்பு
வடக்கு ஆஸ்திரேலியா கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை. பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.
இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர். இந்த மீன் இனங்களுக்கு முதுகில் உள்ள துடுப்பு போன்ற சிறகுக்கு கீழே கூன் விழுந்திருக்கும். இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூன்று டால்பின் இனங்களில் இரண்டு இனங்கள் மீன்பிடி நடவடிக்கைகளாலும் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் அழிவடையும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.