காலப்பயணம்..!
முதலில் “காலம் அல்லது நேரம் என்றால் என்ன..?” என்று பார்ப்போம். நேரத்தை நான்காவது பரிமாணமாக அறியலாம். எப்படி..?
முதலில் ஒருபரிமாண, இருபரிமாண மற்றும் முப்பரிமாணங்கள் பற்றி ஒரு சிறிய விளக்கம்….
பரிமாணம் (Dimension) என்பது “the magnitude of something in a particular direction (especially length or width or height)”ஆகும்.
ஒரு கோட்டிலுள்ள ஒரு புள்ளியை கருதினால் அந்த புள்ளி அந்த கோட்டில் எங்குள்ளது..? கோட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து 5cm தூரத்தில்…” இது 1-D ஆகும். இங்கு அந்த கோடு இருப்பது 1-D-ல். இங்கு ஒரு பரிமாணத்திலேயே அந்த புள்ளி இருக்கும் இடம் தெரிகிறது.
ஒரு காகிதத்தில் உள்ள புள்ளி அந்த காகிதத்தில் எங்கிருக்கிறது என்றால்? முன்பு சொன்னதைப் போல 5 cm என்று சொல்ல முடியாது. காரணம், 5 cm என்பது எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படிச் சொல்லலாம்…அந்த புள்ளி அந்த காகிதத்தின் ஒரு மூலையில் இருந்து 3 cm வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 cm வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும் என்று. இது மிகச் சரியாக அந்த புள்ளியை கண்டுபிடிக்கும். இப்பொழுது அந்த புள்ளி இருப்பது இரு பரிமாணங்களில்…! ஒன்று 90 டிகிரி கோனத்தில் perpendicular-ஆகத்தான் இருக்க வேண்டும்.
அடுத்து ஒரு அறையை எடுத்துக் கொள்ளலாம். அந்த அறை என்பது என்னவென்றால், நீளம், மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணத்துடன் மூன்றாவதாக “உயரம் / ஆழம்” என்ற பரிமாணத்தையும் சேர்த்துக் கொள்வது. அந்த அறையில் ஓய்விலுள்ள ஒரு பறவை…சரியாக எந்த இடத்தில் இருக்கிறது…? “ஒரு மூலையில் இருந்து 3 cm வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 cm வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) 5 cm சென்றால் கிடைக்கும்” எனக் கூறலாம். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோனத்தில் perpendicular-ஆகத்தான் இருக்க வேண்டும்.
அடுத்து, நான்காவது பரிமாணம் என்பது “நேரம்”. அதே அறையில், அந்த பறவை பறந்து கொண்டே இருக்கும் பொழுது, அதன் இடம் மாறும். அந்த பறவையின் சரியான / நிலையான இருப்பிடத்தை காண நமக்கு நான்காவதாக ஒரு பரிமாணம் தேவைப்படுகின்றது. இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், ஒரு மூலையில் இருந்து 3 cm வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 cm வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) 5 cm சென்றால், அந்த பறவை ஒரு குறிப்பிட்ட ‘நேரத்தில்’ இருந்த இடம் கிடைக்கும்..!. இங்கு இந்த நான்கு பரிமாணங்களும் இருந்தால் தான் பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்…
நீளம், அகலம், உயரம் என்பனவே 3 அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்க பரிமாணங்களாகும்.(காலம் எனும் நான்காவது பரிமாணம் Theory ரீதியில் ஏற்கப்பட்டுள்ளது.)
எப்படி ஒரு மனிதனால் ஒரு பரிமாணம், இரு பரிமாணம், மூன்று பரிமாணம் உள்ள பொருட்களை மட்டுமே உணரமுடிகிறது…? ஏன் எனில் மனிதன் ஒரு நான்கு பரிமாண ஆள்…!
எப்படி ஒருவரால் இன்னொருவரின் எதிர்காலத்தை இறந்த காலத்தை கூறமுடியாமல் இருக்கிறது…? ஒரு நான்கு பரிமாண ஆளால் நான்கு பரிமாணத்தில் முன்னும் பின்னும் பார்க்க முடியாமல் இருக்கிறது…! ஆனால் ஒரு சதுரமுகி ஒன்றின் ஒருபக்க நீளம் வழியே இருக்கும் ஒரு புள்ளியை பார்க்கமுடிகிறது…ஏன்…? சதுரமுகி ஓர் மூன்று பரிமாண உருவம்…! அதை விட அது இயங்காமல் ஓய்விலுள்ள ஒரு பொருள்…!
அப்படியானால் ஓர் ஐந்து பரிமாண ஆளால் எமது இறந்த and எதிர் காலத்தை துல்லியமாக கூற முடியும்…! ஏன்..? நாமே ஐந்தாவது பரிமாணத்தில் நுழைந்து விட்டோமானால் சரி…! இதை தான் “Time Travelling” என்பார்கள்..ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது இன்னும் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை…(எழுத்தாளர் சுஜாதா தனது விஞ்ஞான புனைகதை ஒன்றினூடாக இதனை கூறியிருக்கிறார்…! ).
டைம் ட்ராவல் சம்பந்தமாக, இவ்வளவு நாட்களும் விஞ்ஞானிகளுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிறது முக்கியமாக இரண்டு விஷயங்கள்.
கால வெளியில் பிராயணம் செய்ய வேண்டுமென்றால்….
1.ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் பிராயணிக்க வேண்டும். அப்படி பிராயணம் செய்ய ஒரு பாதை வேண்டுமே..? அந்த பாதைகள் புழுத்துளைகள்(Worm Holes) என அழைக்கப்படும் மிக மிக நுண்ணிய குழாய் பாதைகள்.
Worm Holes என்பது என்ன..? உதாரணமாக பந்து மிகவும் வழுக்கும் தன்மை உடையது. மேசையும் மிக மிக தட்டை. (இவை இரண்டுமே முப்பரிமாண பொருட்கள்)..ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பந்திலும் நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள் மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது.
ஆனால் இது நான்காவது பரிணாமமான நேரத்திலும் காணப்படுகிறது . அணுவை விட மிக மிக சிறிய இடைவெளிகள் நேரத்திலும் காணப்படுகிறது. அளவிட மிக சிறியது . மிக மிக சிறிய இடைவெளிகள், விரைவான குறுக்கு பாதை , இரு வேறு நேரத்தையும் இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன . மில்லியன் ட்ரில்லியன் சென்டி மீட்டர் ஒரு சதுர குறுக்குவெட்டு பரப்புக்கு இருக்கலாம் . மனிதனால் போக முடியாதா அளவில் காணப்படுகிறது. அப்படிப்பட்ட மிக நுண்ணிய வார்ம் ஹோல்ஸ் (புழுத்துளைகள்), இந்த பேரண்டத்தில் பல கோடிக்கணக்கிலிருக்கின்றன.அதற்குள் உங்களின் “முடி” கூட நுழையாது.
இந்த துளைகள் மனிதனால் செல்ல முடியாதவை .விஞ்ஞானிகளின்
முயற்சி அந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கினால் அதனுள் மனிதனை செலுத்தலாம் என்பதே..!
2.அதற்குள் ஒரு உயிரையும், அந்த உயிரைக் கடத்தும் ஒரு வண்டியையும் நுழைத்து, ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் அனுப்ப வேண்டும்..!
விபரங்களுக்கு சொடுக்கவும்
Theory of Relativity யில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார்…? அதாவது ஒளியின் வேகத்தில் (3 x 100000000 m/S..!) எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்…? எமக்கு வயது கூடாது or குறையாது…! அப்படியே இருக்கும்…! என்ன நம்ப முடியவில்லையா…? ஆனால் எம்மை சுற்றி இருக்கும் இந்த உலகத்துக்கு வயது கூடிக்கொண்டே இருக்கும்…! வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது.
2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின் 10 வருடத்தின் பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு போயிருப்பார்கள்.
இன்னொரு விஷயம்…!
இப்படி ஒளியின் வேகத்தில் செல்லும் ஒருவரை நீங்கள் பார்க்க முடியாது…! ஒளியின் துணிக்கைகளான Photons களை உங்களால் பார்க்க முடிகிறதா…? இல்லையே…! அப்படி என்றால் கடவுள்… தேவர்கள், ஆவிகள் ஏன்…? வேற்று கிரக மனிதர்கள் உங்கள் கண்ணுக்கு தட்டுப்படாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை தானே…?
இதை தான் Bermudha Triangle இல் நடப்பதாகவும் சொல்கிறார்கள்…! அங்கு காணாமல் போன விமானங்களும் கப்பல்களும் இன்னும் அப்படியே இருக்கிறதாம்…ஆனால் அவர்கள் வேறு ஒரு பரிமாணத்தில் இருப்பதால்…அவர்களுடன் நாம் தொடர்புகொள்ள முடியவில்லையாம்….! அப்ப அங்க அவர்கள் எல்லாரும் வயசு போகாம என்றும் இளமையோடு இருக்கிறார்களா..? ஒருதரம் அங்க போய் பார்ப்பமா எண்டு யோசிக்காதேயுங்கோ….! பொஞ்சாதி, பிள்ளைகுட்டிகள் பாவம்…!
அப்படியானால் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எம்மால் செல்ல முடியுமா..?
காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம்…!
ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons).அவை அந்த பொருளில் பட்டு தெறித்து வந்து எமது கண்ணை வந்து அடைவதால் தான் அந்த பொருள் எமக்கு தெரிகிறது…பட்ட ஒளியில் எந்த நிறத்தை அந்த பொருள் தெறிக்கிறதோ..அந்த நிறமாகவே அந்த பொருள் எமது கண்ணுக்கு தெரியும்…பட்ட ஒளி முழுவதும் அந்த பொருள் உறிஞ்சிக்கொள்ளுமெனில் அந்த பொருள் எமக்கு தெரியாது…!
பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம்.உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும். அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.
இதுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travelling என்கிறோம். அப்படி என்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்சிகளைதான் பார்க்க முடியும்… செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்….
(இதை தான் ஞானதிருஷ்டி என்பார்களோ..?)
இதன் மூலமாக ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் (parallel universe எனும் கோட்பாட்டின் படி) செல்ல முடியும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity ல பயணிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்.”
one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.
இதில் இரண்டு விதமான கொள்கைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்…
ஒன்று… உலக இயக்கம் ஒரே தொடராக நடந்து கொண்டிருக்கிறது… இதன் அடிப்படையில் பார்த்தால், எதிர்காலத்திலிருந்து வருபவர்களால் இறந்த காலத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தினால்… உலக இயக்கத்தின் தொடர்ச்சி மாற்றமடையும்.
அதாவது… உங்களை எதிர்காலத்திலிருந்து வந்தவர் கொன்று விட்டால்… உங்கள் மூலமாக எதிர்காலத்தில் உருவாகி இருக்கக்கூடிய ( பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்…) அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமாம்..!
இந்த கொள்கையில்…
எவ்வாறு அந்த மாற்றம் நிகழும் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை… அதாவது, ஒருவரை இறந்த காலத்தில் கொன்றால்… நிகழ்காலத்தில் அவருடன் தொடர்புடைய நிகழ்வுகள் திடீரென அழியுமா/ மறையுமா? எனும் கேள்விக்கு சிறந்த விளக்கமில்லை…பரிசோதித்துப் பார்க்க முடியாது…!
அடுத்த கொள்கையின் படி…
பல ஃப்ரேம்களாக (Frames) உலக இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதாகும்..இதன் படி இறந்தகாலத்தில் செய்யும் மாற்றம்… அந்த ஃப்ரேமில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்…
இது நினைத்து பார்க்கவே குழப்பமான கொள்கை.
காரணம், ஃப்ரேம் கொள்கையில்… ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் இடையிலான காலத்தை தீர்மானிப்பது கடினமானது…
ஒரு ஃப்ரேமிலிருந்து இறந்தகாலத்துக்கு சென்றால்… பின்பு எப்படி அதே ஃப்ரேமுக்கு திரும்பி வருவது..? என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன…!
ரொம்ப குழப்பமாக இருந்தால் போய் ஒரு Tea குடிச்சிட்டு வந்து திரும்பவும் இந்த Post ஐ வாசியுங்க…!